உத்தரப் பிரதேசம்: முதல் சூரிய சக்தி நகரமாகும் அயோத்தி – பணிகள் தீவிரம்!
Jun 14, 2026, 12:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உத்தரப் பிரதேசம்: முதல் சூரிய சக்தி நகரமாகும் அயோத்தி – பணிகள் தீவிரம்!

Murugesan M by Murugesan M
Oct 10, 2023, 11:30 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இராமர் கோவில் பிரதிஷ்டை விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், அதற்கு முன்பாக அயோத்தியை முதல் சூரிய சக்தி நகரமாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

வருகிற ஜனவரி 22-ஆம் தேதி அயோத்தி இராமர் கோவில் மூலவரான, குழந்தை இராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த வரலாற்று நிகழ்வில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். மேலும், நாடு முழுவதிலும் இருந்து சுமார் 10,000 உயரதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ‘சூரிய சக்தி ஆற்றல் கொள்கை 2022’ எனும் இலட்சியத் திட்டத்தின் மூலம் நொய்டா மற்றும் 16 நகராட்சிகளைச் சூரிய சக்தி நகரங்களாக உருவாக்கத் திட்டமிடப்பட்டது. அதன்படி, சரயு நதிக்கரையில் சூரிய ஆற்றல் பூங்காவை உருவாக்குதல், சூரிய சக்தியில் இயங்கும் படகுகள் வழங்குதல், சூரிய சக்தியால் இயங்கும் தெரு விளக்குகள் அமைத்தல், சூரிய சக்தியில் இயங்கும் வாகனங்கள், பொது இடங்களில் மொபைல் சார்ஜிங் இடங்கள், நகர மின் மயமாக்கல் போன்ற சூரிய சக்தியில் இயங்கும் வசதிகள் உள்ளிட்டவை இந்த திட்டத்தின் ஒரு பகுதியாகும். சூரிய சக்தியைப் பயன்படுத்தி, அரசு கட்டிடங்கள் மற்றும் வீட்டுத் தேவைகளுக்கான மின்சாரமும் வழங்கப்பட உள்ளது.

சூரிய சக்தி நகரம், 2023-28 எனும் ஐந்தாண்டு திட்டத்தின் ஒரு பகுதியாக, சூரிய சக்தி தெருவிளக்குகள், அரசு கட்டிடங்களில் சூரிய ஆற்றல் தயாரிப்பதற்கான வசதிகளை ஏற்படுத்துதல், சார்ஜிங் நிலையங்களுடன் கூடிய மின்-ரிக்‌ஷாக்கள், குடிநீர் இயந்திரத்துக்குச் சூரிய சக்தியால் இயங்கும் சுத்திகரிப்பு வசதிகளும் இந்தத் திட்டத்தில் அடங்கும். இந்த பணிகள் முதற்கட்டத்திலேயே முடிக்கப்படும் என்றும், அயோத்தியில் நடந்து வரும் பெரும்பாலான திட்டங்கள் ஜனவரிக்குள் முடிக்கப்படும் என்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை இயக்குநா் சுக்லா கூறியுள்ளார்.

அயோத்தியில் நடைபெற்று வரும் பணிகளை முதல்வா் யோகி ஆதித்யநாத் நேரடியாகக் கண்காணித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சூரிய சக்தி நகரத் திட்டம் மூலம் சரயூ நதிக்கரையில் 40 மெகாவாட் மின் உற்பத்தித் திறன்கொண்ட சூரிய சக்தி பூங்கா அமைக்கப்பட உள்ளது என்றும், 10 மெகாவாட் மின் உற்பத்தி ஜனவரி மாதத்துக்குள் தொடங்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags: Solar Energymai
ShareTweetSendShare
Previous Post

இராமர் கோவிலை சித்தரிக்கும் 3 கிலோ தலைப்பாகை!

Next Post

நாகை – இலங்கை கப்பல் போக்குவரத்து: திடீர் ஒத்திவைப்பு!

Related News

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள் – முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies