எஸ்.எம்.வி.டி., பெங்களூரில் இருந்து காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக, ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்திற்கு இயக்கப்படும் சிறப்பு இரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
விசாகப்பட்டினத்தில் இருந்து வரும், 15, 22, 29, மற்றும் நவம்பர் 12, 19, 26-ஆம் தேதிகளில் மாலை, 3:55 மணிக்கு புறப்படும் சிறப்பு இரயில், மறுநாள் மதியம், 12:30 மணிக்கு எஸ்.எம்.வி.டி., பெங்களூரு செல்லும்.
மறுமார்க்கமாக, எஸ்.எம்.வி.டி., பெங்களூரில் இருந்து வரும், 16, 30 மற்றும் நவம்பர் 6, 13, 20, 27-ஆம் தேதிகளில், மாலை 3:50 மணிக்கு புறப்படும் சிறப்பு இரயில், மறுநாள் மதியம் 1:30 மணிக்கு விசாகப்பட்டினம் செல்லும். இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.
மேலும், தெற்கு இரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்ட்ரல் – விஜயவாடா பினாகினி விரைவு இரயில் (இரயில் எண் – 12712) அக்டோபர் 10,21,28 மற்றும் நவம்பர் 4 ஆகிய தேதிகளில் 40 நிமிடங்கள் தாமதமாக செல்லும். சென்ட்ரல் – ஹௌரா அதிவிரைவு இரயில் (இரயில் எண் – 12840) அக்டோபர் 12, 17, 24, 31 ஆகிய தேதிகளில் 1 மணி 30 நிமிடங்கள், அக்டோபர் 21, 28 மற்றும் நவம்பர் 4 ஆகிய தேதிகளில் 40 நிமிடங்கள் தாமதமாக செல்லும். சென்ட்ரல் – சாய் நகா் ஷீரடி அதிவிரைவு இரயில் (இரயில் எண் – 22601) அக்டோபர் 25-ஆம் தேதி 2 மணி நேரம் தாமதமாக இயக்கப்படும்.
பெங்களூரு – ஜோலாா்பேட்டை சிறப்பு இரயில் (இரயில் எண் – 06551/ 06552) அக்டோபர் 10, 12, 21 மற்றும் 23 ஆகிய தேதிகளில் இரு மாா்க்கத்திலும் முழுமையாக இரத்து செய்யப்படுகிறது. மேலும், காட்பாடி – ஜோலாா்பேட்டை மெமு சிறப்பு இரயில் (இரயில் எண் – 06417/ 06418) அக்டோபர் 10, 12, 14, 16, 18, 21 மற்றும் 23 ஆகிய தேதிகளில் இரத்து செய்யப்படுகிறது.
அக்டோபர் 17, 24 மற்றும் 31 ஆகிய தேதிகளில் விஜயவாடா – சென்ட்ரல் பினாகினி விரைவு இரயில் (இரயில் எண்: 12711/ 12712) இரு மாா்க்கத்திலும் குண்டூா் – சென்ட்ரல் இடையே இரத்து செய்யப்படும். அக்டோபர் 10, 12, 13, 21 மற்றும் 23 ஆகிய தேதிகளில் ஈரோடு – ஜோலாா்பேட்டை சிறப்பு ரயில் (இரயில் எண் – 06412/ 06411) இரு மாா்க்கத்திலும் திருப்பத்தூா் – ஜோலாா்பேட்டை இடையே இரத்து செய்யப்படும்.
சென்ட்ரல் – பாலக்காடு அதிவிரைவு இரயில் (இரயில் எண் – 22651/22652) அக்டோபர் 10-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை, திருச்செந்தூா் – பாலக்காடு விரைவு இரயில் (இரயில் எண் – 16732/16731) அக்டோபர் 12-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை இரு மாா்க்கத்திலும் பாலக்காடு நகரம் – பாலக்காடு சந்திப்பு இடையே இரத்து செய்யப்பட்டுள்ளது.