திமுகவின் கஜனா என வர்ணிக்கப்படும் அரக்கோணம் எம்பி ஜெகத்ரட்சகனின் வீட்டிற்குள் கடந்த 5 -ம் தேதி, யாரும் எதிர்பாராத நிலையில் உள்ளே புகுந்தனர் வருமான வரித்துறையினர்.
மேலும், அவருக்குச் சொந்தமான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்பூர், மற்றும் புதுச்சேரியில் உள்ள நட்சத்திர ஹோட்டல்கள், மதுபான ஆலைகள், மருத்துவமனைகள் என 40-க்கும் மேற்பட்ட இடங்களிலும் இந்த சோதனை நடைபெற்றது.
முதல், 2வது நாள், 3வது நாள், 4-வது நாள் என நாட்கள் நீண்டு கொண்டே சென்றது. 5 -வது நாளான 9-ம் தேதியான நேற்றும் சல்லடை போட்டுச் சலித்தனர். இதில், ரொக்கப் பணம், முக்கிய ஆவணங்களையும் தட்டித் தூக்கியுள்ளனர்.
ஒரு கட்டத்தில், டெல்லியிலிருந்து வருமான வரித் துறை ஆணையர் சுனில் குப்தா, சென்னை வந்து நேரடியாகவே சோதனையில் ஈடுபட்டார். யாரும் எதிர்பாராத வகையில் forensic audit எனப்படும் தொழில்நுட்ப தடயவியல் ஆய்வை மேற்கொண்டனர். இதில், சிக்கியது, ஜெகத்ரட்சகனின் மருமகன்கள் இளமாறன் மற்றும் நாராயணசாமி கும்பலின் சொத்துக்கள்.
மேலும், தற்போது வரை, 4.5 கோடி ரூபாய் ரொக்கப் பணம், 2.7 கிலோ தங்கம் மற்றும் பல கோடி ரூபாய் சொத்து ஆவணங்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.
ஜெகத்ரட்சகன் மீதான திடீர் சோதனைக்கான காரணம் என்ன? என்பது குறித்து டெல்லியிலிருந்து தகவல் கசிந்துள்ளது. அதில், ஜெகத்ரட்சகன் நடத்தி வரும் அறக்கட்டளையை மையமாக வைத்தே இந்த சோதனை நடைபெற்றுள்ளது.
கடந்த 2017 -ம் ஆண்டுக்குப் பின்னர் அவரது அறக்கட்டளைக்கு வரி விலக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், புதிய புதிய பெயர்களில் அறக்கட்டளையைப் பதிவு செய்து வந்துள்ளனர். இதனால், அதையும் ரத்து செய்துள்ளனர். இதில், சந்தேகம் எழுவே, 2017-ம் ஆண்டு முதல் தற்போது வரை அறக்கட்டளை பணப்பரிமாற்ற விவகாரத்தில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதை அடுத்தே இந்த சோதனை என்கிறார்.
ஆக மொத்தம், நெருப்பில்லாமல் புகையாது என்பது பழமொழி. இதற்கும், இந்த சோதனைக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ….?