திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் 15 அசையா பினாமி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
மத்திய அமைச்சராக ஆ.ராசா இருந்த போது வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. அதாவது, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக ஆ.ராசா இருந்தபோது, 15 அசையா சொத்துக்கள் பினாமி பெயரில் நடத்தி வந்ததாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது.
இந்த நிலையில், 2002 சட்ட விரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ், கோவை ஷெல்டர்ஸ் ப்ரோமோட்டர் என்ற நிறுவனத்தின் பெயரில் உள்ள சொத்துக்கள் அனைத்தையும் முடக்கி உள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
அமலாகத்துறையின் இந்த அதிரடி நடவடிக்கையை எதிர்பார்க்காத திமுகவும், ஆ.ராசாவும் ஆடிப்போய் உள்ளனர்.