மத அடிப்படைவாத பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும் - இந்து முன்னணி கருத்து!
Sep 14, 2026, 05:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மத அடிப்படைவாத பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும் – இந்து முன்னணி கருத்து!

Murugesan M by Murugesan M
Oct 10, 2023, 05:28 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உலகத்திலிருந்து மத அடிப்படைவாத பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டிய தருணம் இது என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பாக, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இஸ்ரேலியர்கள் விரதம் இருக்கும் நாளில் சதி செய்து ஹமாஸ் எனும் இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திப் பல நூறு பேரைக் கொன்றனர்.

மேலும், பல வெளிநாட்டினரைக் கொடூரமாகத் தாக்கி துப்பாக்கி முனையில் கடத்தி, சிலரைக் கொன்ற விடீயோக்கள் சமூக ஊடகங்களில் வரலானது. இது உலக மக்களின் மனங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈவிரக்கமற்ற மனித மிருகங்களாக நடந்துகொண்ட ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு போன்றவை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருத்து உலக அளவில் எழுந்துள்ளது. பொறுப்புணர்ச்சியைத் தூண்டி மனிதர்களை வேட்டையாடும் இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதம் நாகரிக உலகிற்கு அச்சுறுத்தல் என்ற கருத்து வலுப்பெற்றுள்ளது.

இஸ்ரேல் நாட்டின் இருபுறமும் மத அடிப்படைவாத பயங்கரவாத குழுக்கள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் இஸ்ரேலுக்கு உறுதுணையாகப் பாரதம் இருக்கும் எனக் கூறியுள்ளார். அதேபோல் அமெரிக்கா, பிரிட்டன், உக்கரையன் என உலகின் பல நாடுகளும் இஸ்ரேலுக்குத் துணை நின்று பயங்கரவாதிகளை முறியடிக்க ஆதரவு தெரிவித்து உள்ளன.

எனவே இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டிய தருணம் இது என்பதை உலக நாடுகள் உணர்ந்துள்ளன. மேலும் பாகிஸ்தானைச் சேர்ந்த மதபோதகர் காலித் மெஹ்மூத் அப்பாசி என்பவன் “ஹமாஸ் இஸ்ரேலுக்கு என்ன செய்ததோ, அதை‌ நாங்கள் காஷ்மீருக்குச் செய்வோம்” என்று கூறியுள்ளான் அதே சமயம் இந்தியாவில் சில இஸ்லாமியர்கள் இஸ்ரேல் தேசத்திற்கு எதிராகக் கருத்திடுகின்றனர்.

இஸ்ரேலை எதிர்ப்பதாகக் கூறி ஹமாஸ் பயங்கரவாதிகளை ஆதரித்தும், பயங்கரத்தை எதிர்க்கும் பாரத அரசிற்கு அச்சுறுத்தல் விடுத்தும் வருகின்றன. இவர்களின் உள்நோக்கம் இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு இந்தியாவில் ஆள் சேர்ப்பது என்பது தெரியவந்துள்ளது.

எனவே, மத்திய மாநில உளவு நிறுவனங்கள் இவர்களைத் தீவிர கண்காணிப்பில் வைக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக் கொள்கிறது.. இஸ்ரேல் உடன் உலக நாடுகள் இணைந்து ஒட்டுமொத்த இஸ்லாமிய அடிப்படைவாதம் அழிப்பதற்கு உற்ற துணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

Tags: bharath hindu munnani
Share
Tweet
SendShare
Previous Post

ஆ.ராசாவின் சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை!

Next Post

ஹமாஸ் படையை நிலைகுலைய வைத்த இஸ்ரேல் – 200 இடங்களில் வான்வெளி தாக்குதல்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies