பாகிஸ்தான் அணிக்கு 345 ரன்களை இலக்காக நிர்ணயித்துயுள்ளது இலங்கை அணி.
ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடரின் 8 வது போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜுவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது.
இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்யை தேர்வு செய்தது. இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக நிசாங்க மற்றும் குஷால் பெரரா ஆகியோர் களமிறங்கினர்.
சிறப்பாக விளையாடி வந்த நிசங்க 7 பௌண்டரீஸ் மற்றும் 1 சிக்சர் அடித்து மொத்தமாக 61 பந்துகளில் 51 ரன்களை எடுத்து ஷதாப் கானின் பந்தில் ஆட்டமிழந்தார். குஷால் பெரரா ரன் ஏதும் எடுக்காமல் ஹசன் அலி பந்தில் டௌட் அவுட் ஆகினார்.
இவர்களை தொடர்ந்து குஷால் மெண்டிஸ் மற்றும் சதீரா களமிறங்கினர். குசல் மெண்டிஸ் 14 பௌண்டரீஸ், 6 சிக்சர்கள் என மொத்தமாக 77 பந்துகளில் 122 ரன்களை எடுத்து ஹசன் அலி பந்தில் ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக களமிறங்கிய சதீர சமரவிக்ரமா 11 பௌண்டரீஸ், 2 சிக்சர்கள் என மொத்தமாக 89 பந்துகளில் 108 ரன்களை அடித்து ஹசன் அலி பந்தில் ஆட்டமிழந்தார். பின்பு களமிறங்கிய வீரர்கள் எல்லாம் சொற்ப ரங்களில் ஆட்டமிழக்க 50 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட்கள் இழப்பிற்கு 344 ரன்களை எடுத்துள்ளது.
பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஹசன் அலி 4 விக்கெட்களும் ஹாரிஸ் 2 விக்கெட்களும் அப்ரிடி, ஷதாப் கான், மொஹம்மத் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்துள்ளனர்.
இதன் மூலம் பாகிஸ்தான் அணிக்கு 345 ரன்களை இலக்காக நிர்ணயித்துயுள்ளது இலங்கை அணி.