உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றையப் ஆட்டத்தில் இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் மதியம் 2 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது.
இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 5 முறையான சாம்பியனான ஆஸ்திரேலியாவை வீழ்த்திய உத்வேகத்தில் இருக்க, ஆப்கானிஸ்தானோ தொடக்க ஆட்டத்தில் வங்கதேசத்திடம் கண்ட தோல்வியிலிருந்து மீளும் முனைப்பில் உள்ளது. இரு அணிகளும் மதியம் 2 மணிக்கு டெல்லி மைதானத்தில் மோத உள்ளன.
இந்திய – ஆப்கானிஸ்தான் அணிகள் இதுவரை 3 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், இந்தியா 2 வெற்றிகளுடன் முன்னிலையில் இருக்கிறது. 1 ஆட்டம் டிராவில் முடிந்தது.
கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்கா 428 ரன்களை எடுத்தது. இலங்கை அணி 326 ரன்கள் எடுத்து தோல்விய தோல்வி அடைந்தது. டெல்லி மைதானத்தில் ஒரே நாளில் 754 ரன்கள் சாதனை அளவாக குவிக்கப்பட்டன.
ஆனால், இன்றைய போட்டியில் இந்தியா – ஆப்கானிஸ்தான் என்ன செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்திய அணியில் அஸ்வினுக்கு பதிலாக முகமது ஷாமி அல்லது ஷர்துல் தாகுர் அணியில் இடம்பெறலாம். சுப்மன் கில், டெங்கு பாதிப்பிலிருந்து இன்னும் மீண்டு வரவில்லை என்பதால், இஷான் கிஷாணுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இன்றைய ஆட்டத்தில் இஷான் கிஷாண், ஸ்ரேயாஸ் ஐயர் தங்களது முழு திறமையையும் வெளிப்படுத்தி ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தான் அணிக்கு பலம் அதன் சுழற்பந்துவீச்சு. அந்த அணியில் ரஷீத் கான், முஜிப் உர் ரஹ்மான் மற்றும் அனுபவம் வாய்ந்த முகமது நபி ஆகியோர் உள்ளனர்.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில், ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், இரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகுர், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், முகமது ஷாமி, ரவிச்சந்திரன் அஸ்வின், இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் உள்ளனர்.
ஹஷ்மத்துல்லா ஷாஹிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியில், ரஹமத்துல்லா குர்பாஸ், இப்ராகிம் ஜர்தன், ரியாஸ் ஹஸ்ஸன், ரஹ்மத் ஷா, நஜ்புல்லா ஜர்தன், முகமது நபி, இக்ரம் அலிகில், அஸ்மதுல்லா ஓமர்ஜாய், ரஷீத்கான், முஜிப் உர் ரஹ்மான், நூர் அகமது, ஃபஸல்ஹக் பரூக்கி, அப்துல் ரஹ்மான் மற்றும் நவீன் உல் ஹக் ஆகியோர் உள்ளனர்.