மிசோரமில் சட்டப்பேரவை தேர்தல் வரும் நவம்பர் 7-ம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3 -ம் தேதி நடைபெற உள்ளது.
மிசோரம் வடகிழக்கு இந்தியாவின் ஒரு பகுதியாகும். மிசோரம் சட்டப்பேரவை அய்சால் நகரத்தில் உள்ளது. மிசோரம் சட்டமன்றம் 40 உறுப்பினர்களைக் கொண்டது. மிசோரம் சட்டமன்றத்திற்கு இறுதியாக கடந்த 2018 -ம் ஆண்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது.
கடந்த 2018 -ஆம் ஆண்டு மிசோரம் மாநிலத்தில் நடைபெற சட்டப்பேரவைத் தேர்தலில், மிசோரம் கட்சியைச் சேர்ந்த 5 பேர் சுயேட்சைகளாக போட்டியிட்டு வெற்றி பெற்றனர். ஆனால், அந்த கட்சி பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்படவில்லை.
இந்த நிலையில், இவர்கள் அனைவரும் வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளனர். இதனால், எம்எல்ஏக்கள் 5 பேரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். ஏற்கனவே 2 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில், தற்போது 5 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளதால், ராஜினாமா செய்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7 -ஆக உயர்ந்துள்ளது.