நானாஜி தேஷ்முக்யின் தியாகம் மற்றும் சேவை மனப்பான்மை ஒவ்வொரு தலைமுறைக்கும் உத்வேகமாக இருக்கும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பாரத ரத்னா நானாஜி தேஷ்முக் பிறந்தநாளை முன்னிட்டுப் பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். நானாஜி தேஷ்முக் நாட்டின் கிராமங்கள் மற்றும் பழங்குடி பகுதிகளின் வளர்ச்சிக்காகத் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார் என்று மோடி கூறியுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
“பாரத ரத்னா நானாஜி தேஷ்முக் பிறந்த நாளில் அவருக்கு எனது தாழ்மையான மரியாதை. நாட்டின் கிராமங்கள் மற்றும் பழங்குடி பகுதிகளின் வளர்ச்சிக்காக அவர் தமது வாழ்க்கையை அர்ப்பணித்தார். அவரது தியாகமும், சேவை மனப்பான்மையும் ஒவ்வொரு தலைமுறைக்கும் உத்வேகமாக இருக்கும்.