டெல்லி துணை நிலை ஆளுநர் அனுமதி அளித்தன் பேரில், சர்ச்சை எழுத்தாளாளர் அருந்ததி ராய் மற்றும் முன்னாள் பேராசிரியர் ஷேக் ஷோகத் ஹுசைன் ஆகியோருக்கு எதிராக, தேசத்துரோகம் உள்பட சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் 1967 இன் பிரிவு 13 -ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
காஷ்மீரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சுஷில் பண்டிட் கடந்த 2010 -ம் ஆண்டு அக்டோபர் 28 -ம் தேதி, திலக்மார்க் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில் அக்டோபர் 21 -ம் தேதி அன்று ‘Azadi – The Only Way’ எனும் தலைப்பில் மாநாடு நடைபெற்றது.
இதில், சர்ச்சை எழுத்தாளாளர் அருந்ததி ராய், முன்னாள் பேராசிரியர் ஹூசைன், சையத் அலி ஷா கிலானி மற்றும் வரவர ராவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் அவர்கள் பேசுகையில், இந்தியாவின் பகுதியாகக் காஷ்மீர் ஒருபோதும் இருந்தது இல்லை என்றனர். மேலும், ஆயுதப்படைகளால் ஜம்மு – காஷ்மீர் வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்கப்பட்டது, எனவே, ஜம்மு – காஷ்மீர் மாநிலம் சுதந்திரம் பெற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் வெறுப்பு பேச்சை விதைத்திருந்தனர்.
இந்த நிலையில், இது தொடர்பாகப் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒரு புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டு இருந்தது. அதன்பேரில், தேசத்துரோகம் உள்பட சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் 1967 இன் பிரிவு 13 -ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த தொடர்பாக டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா அனுமதி அளித்துள்ளார். அதன் பேரில், அருந்ததி ராய் மற்றும் முன்னாள் பேராசிரியர் ஷேக் ஷோகத் ஹுசைன் ஆகியோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல், தேசிய ஒருமைப்பாட்டுக் குந்தகம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ், அதாவது 153 ஏ, 153 பி, 505 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், இவர்கள் அனைவரும் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.