ஒரு நாள் கிரிக்கெட் உலகக்கோப்பைத் தொடரின் 9-வது போட்டி இன்று டெல்லி மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.
இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வுச் செய்தது. இதன்படி ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ரஹமத்துல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஜர்தன் ஆகியோர் களமிறங்கினர்.
இப்ராஹிம் 4 பவுண்டரிகள் அடித்து 28 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் பின் ரஹ்மத் ஷா களமிறங்கிறனார். தொடர்ந்து, 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 28 பந்துகளில் மொத்தமாக 21 ரன்கள் எடுத்த ரஹமத்துல்லா குர்பாஸ், தனது விக்கெட்டினை ஹர்திக் பாண்டியா பந்து வீச்சில் இழந்து வெளியேறினார்.
இதனை தொடர்ந்து, 4 பவுண்டரிகள் அடித்து 22 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து ரஹ்மத் ஷா ஆட்டமிழந்தார். 24 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்கள் சேர்த்தது.
ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி மற்றும் அஸ்மதுல்லா ஓமர்ஜாய் ஆகியோர் நிதானமாக ஆடி வருகின்றனர். தற்போது 30 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை எடுத்து ஆப்கானிஸ்தான் அணி நிதானமாக விளையாடி வருகிறது.