ராஜஸ்தான் தேர்தல் நவம்பர் 23ம் தேதி நடைபெற இருந்த தேர்தல் நவம்பர் 25ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மிசோரம், சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்குச் சட்டமன்றத் தேர்தல் கடந்த 9-ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் மொத்தம் 200 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளது. இந்த தொகுதிகள் அனைத்துக்கும் ஒரே கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், நவம்பர் 23ம் தேதி நடைபெற இருந்த தேர்தல் நவம்பர் 25 -ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆனால், திட்டமிட்டபடி, டிசம்பர் 3-ம் தேதியே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.