தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின், அக்டோபர் மற்றும் நவம்பர் மாத, என் மண் என் மக்கள் நடைபயணம் விவரம் வெளியாகியுள்ளது.
பாரதப் பிரதமர் தலைமையில் பாஜக மூன்றாவது முறையாக ஹாட்ரிக் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டும் என்று, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் நடைபயணம் மேற்கொண்டு வருகின்றார்.
இந்த நடைபயணம் 2 -வது கட்டம் நிறைவு பெற்ற நிலையில், தற்போது, அக்டோபர் மற்றும் நவம்பர் மாத யாத்திரை துவங்க உள்ளார். இந்த நிலையில், எண் மண் , என் மக்கள் பொறுப்பாளர் கே.எஸ். நரேந்திரன் மற்றும் இணை பொறுப்பாளர் அமர் பிரசாத் ரெட்டி ஆகியோர் இணைந்து, அக்டோபர் மற்றும் நவம்பர் மாத என் மண் என் மக்கள் நடைபயணம் நடைபெறும் தேதி, கிழமை, இடம் ஆகியவற்றை வெளியிட்டுள்ளனர்.
அதன்படி, அக்டோபர் மாதம் 16 -ஆம் தேதி திங்கள்கிழமை அவினாசியில் துவங்குகிறது. தொடர்ந்து மேட்டுப்பாளையத்தில் நடைபெறுகிறது. இதனையடுத்து, 17- ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பவானி, அந்தியூர், 18 -ஆம் தேதி புதன்கிழமை பவானி சாகர், கோபி, 19 -ஆம் தேதி வியாழக்கிழமை பல்லடம், சூலூர், 20 -ஆம் தேதி வெள்ளிக்கிழமை திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு, 25 – ஆம் தேதி புதன்கிழமை பெருந்துறை, மொடக்குறிச்சி, 26 -ஆம் தேதி வியாழக்கிழமை ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, 27 -ஆம் தேதி வெள்ளிக்கிழமை சங்ககிரி, குமாரபாளையம்.
28 – ஆம் தேதி சனிக்கிழமை, நாமக்கல், திருச்செங்கோடு, 29 -ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சேந்தமங்கலம், ராசிபுரம், 31 -ஆம் தேதி பரமத்தி வேலூர், அரவாக்குறிச்சியில் நடைபயணம் மேற்கொள்கிறார்.
நவம்பர் 1 -ஆம் தேதி புதன்கிழமை கரூரிலும், 2-ம் தேதி வியாழக்கிழமை கிருஷ்ணராயபுரம், குளித்தலை, 5 -ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மணப்பாறை, விராலிமலை, 6 -ஆம் தேதி திங்கள்கிழமை கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை, 7 -ஆம் தேதி செவ்வாய்க்கிழமை திருவரம்பூர், ஸ்ரீரங்கம், 8 -ம் தேதி புதன்கிழமை திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, 9-ம் தேதி வியாழக்கிழமை மணச்சநல்லூர், அடுத்து லால்குடியில் நிறைவு பெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.