தமிழகத்திற்குக் கர்நாடக அரசு 3,000 கன அடி நீர் திறந்துவிட வேண்டும் எனக் கர்நாடகா அரசுக்கு, காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரை செய்துள்ளது.
புது டெல்லியில் காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாகக் காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகம் மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது, காவிரி நதியிலிருந்து தினமும் வினாடிக்கு 12,000 கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் எனத் தமிழக அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு கர்நாடகா அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில், காவிரி நதியில் இருந்து தினமும் வினாடிக்கு 3,000 கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் எனக் காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரை செய்துள்ளது.
காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட முடியாது எனக் கர்நாடகா அதிகாரிகள் தெரிவித்த கருத்தை, காவிரி ஒழுங்காற்றுக்குழு முற்றிலும் நிராகரித்தது.