லிடியா சூறாவளி மெக்சிகோவின் பசிபிக் கடற்ரைகயில் கரையைக் கடந்தது.
வெப்பமண்டல சூறாவளியின் மையப் பகுதியான லிடியாவின் கண் பகுதி, மெக்சிகோவின் மேற்கு மாநிலத்தின் அருகே நிலத்தைக் கடந்தது. இப்பகுதி மக்கள் தொகை குறைந்த தீபகற்பமாகும்.
வெப்பமண்டல சூறாவளி மெக்சிகோவின் பசிபிக் கரையோரப் பகுதியான புவேர்டோ வல்லார்டாவை நோக்கி நகர்ந்தபோது, மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது.
சூறாவளி ஜாலிஸ்கோ மாநிலத்தின் தலைநகர் பகுதியிலிருந்து, மேற்கே 90 கிலோ மீட்டர் தொலைவில் நகர்ந்தது.
செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில் 105 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதுடன், நிலத்தின் மீது நகர்ந்த பிறகும் லிடியா ஒரு சக்திவாய்ந்த சூறாவளியாகவே இருந்தது.
அமெரிக்க வானிலை நிறுவனத்தின் படி, லிடியா சூறாவளி வடகிழக்கே சுமார் 17 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது. மேலும் அது நள்ளிரவில் மெக்ஸிகோவின் இரண்டாவது பெரிய நகரத்தைத் தொடும் போது, அது வகை ஒன்று சூறாவளியாக இருக்கலாம் என்று கணித்துள்ளது.
லிடியா சூறாவளி அதிகபட்சமாக மணிக்கு சுமார் 140 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. பின்னர் நிலத்தைத் தாக்கும் முன் மேலும் வலுவடையும் சாத்தியக்கூறுகளும் உள்ளதாக அமெரிக்க தேசிய சூறாவளி மையம் தெரிவித்துள்ளது.
மெக்சிகோவில் சில பிராந்தியங்களில், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும், அப்பகுதியிலுள்ள மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் படி அறிவுறுத்தப்பட்டனர்.
இந்த புயலால் நயாரிட், சினாலோவா உள்ளிட்ட மாநிலங்களில் 30 சென்டி மீட்டர் வரை கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டது. குறிப்பாக கடற்கரைக்கு அருகில் உயரமான நிலப்பரப்பு உள்ள பகுதிகளில் திடீர் வெள்ளம் மற்றும் மண் சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.