இஸ்ரேலில் நாட்டில் இருந்து இந்தியா திரும்ப விரும்பும் மக்களுக்காக ஆபரேஷன் அஜய்யைத் தொடங்கியுள்ளது இந்திய அரசு.
இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் சமூக வலைதளப் பதிவு மூலம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், இஸ்ரேலில் நாட்டில் இருந்து இந்தியா திரும்ப விரும்புவார்களுக்கு வசதியாக ஆபரேஷன் அஜய்யைத் தொடங்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு அரசு முழு அர்ப்பணிப்புடன் உள்ளது.
இதற்காக,வாடகை விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இஸ்ரேலில் உள்ள இந்தியத் தூதரகம், சிறப்பு விமானத்தில் செல்ல, முதலில் பதிவு செய்த இந்தியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளது. அடுத்துப் பதிவு செய்தவர்களுக்கு அடுத்தடுத்த விமானங்கள் மூலம் அனுப்பிவைக்கப்படுவர்.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் நடந்து வரும் நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டும், நிலைமையைக் கண்காணிக்கவும், தகவல் மற்றும் உதவிகளை வழங்கவும் இஸ்ரேலில் இந்திய அரசு 24 மணி நேர ஹெல்ப்லைன் தொடங்கியுள்ளது.
அதன்படி, டெல் அவிவில் உள்ள இந்தியத் தூதரகம் 24 மணி நேர அவசரக் கால உதவி எண்ணை அமைத்துள்ளது, அங்குள்ள இந்தியர்கள் 972-35226748 மற்றும் 972-543278392 என்ற எண்ணிலும், cons1.telaviv@mea.gov.in என்ற மின் அஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என்றும், அதேபோல, ரமல்லாவில், 970-592916418 என்ற எண்ணிலும், rep.ramallah@mea.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவின் தலைநகர் புதுதில்லியில் 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு அறையைக் கட்டணமில்லா எண் 1 8 0 0 1 1 8 7 9 7 மற்றும் தொலைப்பேசி எண்கள் 91-11 23012113, 91-11-23014104,91-11-23017905 மற்றும் 919968291988 எண் மூலமாகவும் situationroom@mea.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் உதவி பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும் ஆபத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை மிகுந்த மனிதாபத்துடன் அணுகி, அவர்கள் மீது ஒரு துளி தூசு, துரும்பு விழாமல் காப்பாற்றிய பிரதமர் மோடிக்கு, இஸ்ரேல் வாழ் இந்தியர்கள் கண்ணீர் விட்டபடி நன்றி தெரிவித்து வருகின்றனர்.