திருக்கோவில்கள் குறித்து பிரதமர் மோடியின் குற்றச்சாட்டை மறுக்கிறேன் என்று கூறிய தமிழக முதல்வருக்கு இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாரத பிரதமர் மோடி தமிழக அரசு ஆலய சொத்துக்களை ஆக்கிரமித்துள்ளது என்றதை தமிழ்நாடு முதல்வர் மறுக்கிறார். தமிழக முதல்வர் தான் உண்மையை மறைத்து மக்களை திசைதிருப்ப பார்க்கிறார்.
திருக்கோவில் இடங்களை ஆக்கிரமிக்கவில்லை என்று கூறிய முதல்வர் ஸ்டாலின் 3500 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீட்டதாக கூறுகிறார். கோவில் நிலங்களை ஆக்கிரமித்து அனுபவிக்க யார் காரணம்? 3500 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அனுபவித்தவர்களிடம் இருந்து தமிழக அரசு குத்தகை, வாடகை எவ்வளவு வசூல் செய்தது? அவர்கள் மீதான சட்ட நடவடிக்கை என்ன? இதனை ஏன் மறைக்கிறீர்கள்? ஆலயப் புனிதம் காக்க, சரியாக பராமரிக்க சென்னை உயர்நீதிமன்றம் 75 வழிகாட்டுதல்களை வெளியிட்டது.
அதனை நடைமுறை படுத்தாது ஏன்? யாரை காப்பாற்ற? ஆலய சொத்துக்கள் ஆலய பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்று பலமுறை உயர்நீதிமன்றம் வலியுறுத்தியும் பள்ளி நடத்துகிறோம், கல்லூரி நடத்துகிறோம் என ஆலய சொத்துக்களைப் பயன்படுத்துவது முறைகேடு தானே? தற்போது கோவில்களின் பெயரால் நடத்தப்படுகின்ற பள்ளி, கல்லூரிகளில் இந்து ஆன்மிக கல்வியா போதிக்கப்படுகிறது? பள்ளி, கல்லூரிகளை நடத்த வேண்டியது அரசு தானே? பல கோவில்களின் சொத்துக்கள் இஸ்லாமிய, கிறித்துவ ஆக்கிரமிப்பில் எப்படி போனது? இந்து சமய அறநிலையத் அதிகாரிகள் துணையால் தானே? குத்தகை, வாடகை பாக்கி என போர்டு வைத்தால் மட்டும் போதாது, முறைகேடாக ஆக்கிரமிக்க துணைபோன அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டுமா? இல்லையா?
கடந்த ஆட்சியில் சிலை கடத்தல் வழக்கு பலவும் நடந்தது. சிலை கடத்தலுக்குத் துணைபோன இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சி வந்ததும் அந்த வழக்குகள் என்னவானது? குற்ற செயலுக்கு துணைபோனதாக சிக்கிய அதிகாரிகள் இப்போது அதிகார பலம் மிக்க அதிகாரிகளாக வலம் வர திமுக ஆட்சி தானே அவர்களுக்குத் துணைபோகிறது?
இதுவும் ஆலயத்தை சீரழிக்கும் சதியாகத்தானே இருக்கிறது? கொரோனா காலத்தில் தினசரி லட்சக்கணக்கான உணவு பொட்டலங்கள் கோவில் நிதியில் இருந்து செலவு செய்து வழங்கப்பட்டது. ஆனால், அதில் உங்கள் படமும் உங்கள் தந்தையின் படமும் தானே இடம்பெற்றது. கோவில் நிதி செலவு செய்யப்பட்டதை அரசின் செயல்பாடாக காட்டியதும் முறைகேடு தானே? இதுவரை இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் கோவில் உண்டியல் நிதியில் இருந்து தரப்படும் ஊழியர் நியமனம், இலவச திருமணம் என தமிழ்நாடு முதல்வர் என்ற முறையில் தாங்கள் தலைமையேற்றபோது அவை எதுவும் கோவிலில் வைத்து நடக்காமல் பார்த்துக் கொண்டது சரியானதா? காசைக்கொட்டி தரும் இந்து கோவிலின் பெயர் வந்துவிடக்கூடாது என்று நீங்களும் உங்கள் கட்சியும் செய்ததாக காட்டிக்கொண்டது சரியா?
பல பேருந்து நிலையங்கள், கலெக்டர் அலுவலகங்கள், உழவர் சந்தைகள், ஈ.வெ.ரா. சமத்துவபுர குடியிருப்புகள் என கோவில் சொத்துக்களை இந்து சமய அறநிலையத் துறையின் துணையோடு எந்தவித வாடகையோ, குத்தகையோ தராமல் ஆக்கிரமித்த பட்டியல் எங்களிடம் இருக்கிறது.
அரசு ஆக்கிரமிக்க வில்லை என்று பொய் சொல்கிறீர்களே. இந்த இடங்களை எல்லாம் தமிழ்நாடு அரசு எப்போது விடுவித்து தரும் என முதல்வர் அறிவிக்க முடியுமா? இதுவரை கோவில் உண்டியல் மற்றும் வருமானங்களில் தான் குறிப்பிட்ட சதவீதம் நிர்வாக செலவினங்களுக்காக அரசு எடுத்து வந்தது. இப்போது வங்கி டெபாசிட்டு மூலம் வரும் வட்டியிலும் அரசு எடுக்கிறது.
சமீபமாக கோவில் நிதியில் அதிகாரிகளுக்கு அமைச்சருக்கு புத்தம்புதிய விலையுயர்ந்த கார் வாங்கியும், அதற்கான பெட்ரோல் செலவும் கோவில் கணக்கில் வருகிறது என்ற குற்றச்சாட்டுக்கு என்ன பதில்? மசூதி சொத்துக்களை நிர்வகிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள வக்ஃப் வாரிய செலவு எந்த கணக்கில் வருகிறது என்று கூறுவாரா முதல்வர்? தற்போது மீண்டும் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து சாதி பிரச்சினை என காரணம் காட்டி பல கோவில்கள் இழுத்து மூடி சீல் வைக்கப்பட்டுள்ளதே. இது தான் தமிழ்நாடு அரசின் சமூக நல்லிணக்க செயல்பாடா?
தேவகோட்டை கண்டதேவி கிராம சொர்ணமூர்த்தீஸ்வரர் தேரோட்டம் மீண்டும் நிறுத்தப்பட்டு இருக்கிறது தெரியுமா? சமூக நல்லிணக்கம்…