சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை சிறப்பு கூட்டத் தொடரில் பணியாற்ற காவலர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு அடையாள அட்டை, அங்குள்ள குப்பைத் தொட்டியில் கிடந்த சம்பவம் பலரையும் கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த 9- ம் தேதி துவங்கியது. பல்வேறு நிகழ்ச்சிகளுடன் 11 -ம் தேதி வரை, அதாவது 3 நாட்கள் நடைபெற்றது.
ஒவ்வொரு சட்டமன்ற கூட்டத் தொடரின் போதும் கூடுதலாக பாதுகாப்பு பணியில் காவல் துறையினர் அமர்த்தப்படுது வழக்கம். அப்போது, அவர்களுக்கு சிறப்பு அடையாள அட்டை வழங்கப்படும். அதை அணிந்து கொண்டால் மட்டுமே அவர்கள் பணியில் ஈடுபட முடியும். அந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள குப்பைத் தொட்டியில், காவல்துறையினருக்கு வழங்கிய சிறப்பு அடையாள அட்டையை போடப்பட்டு இருந்தது.
பாதுகாப்புக்கு வந்த காவல் துறையினரின் தங்களுக்கு வழங்கிய அடையாள அட்டையை தூக்கி எறிந்து விட்டு சென்றுள்ளதும், குறிப்பாக, சிறப்பு அடையாள அட்டையின் மரியாதை இவ்வளவு தானா? என தலைமைச் செயலகத்தில் பணிபுரியம் ஊழியர்கள் புலம்புகின்றனர். மேலும், ஒரு சில காவலர்கள் செய்யும் காரியம் ஒட்டுமொத்த காவல்துறைக்கும் தலைகுனிவை ஏற்படுத்தியாக புகார் தெரிவித்தனர்.