ராஜமாதா விஜய ராஜே சிந்தியாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
ஏழைகள் மற்றும் நலிவடைந்தோருக்கான அவரது முயற்சிகள், வலுவான இந்தியாவை உருவாக்க அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
“ராஜமாதா விஜயராஜே சிந்தியாவின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். மக்கள் நலனுக்காகவும், தேச சேவைக்காகவும் அவர் தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தார். ஏழைகள் மற்றும் நலிந்தவர்களுக்காக அவர் எடுத்த முயற்சிகள், வலுவான இந்தியாவை உருவாக்க அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும்” என தெரிவித்துள்ளார்.