ஹர்திக் பாண்டியா இந்திய அணியுடன் இருக்கும் நிலையில், தன் 2 வயது மகன் தனக்காக ஒரு பிறந்தநாள் பரிசை தானே உருவாக்கி கொடுத்ததை பற்றிக் கூறியுள்ளார்.
நேற்று இந்தியா அணியின் வீரர் ஹர்திக் பாண்டியாவுக்கு 30 வது பிறந்தநாள். இதுனால் நேற்று நடைபெற்ற இந்தியா, ஆப்கானிஸ்தான் போட்டிக்கு முன்பு முன்னாள் வீரர் கவுதம் கம்பீருடன் சிறிய அளவில் கேக் வெட்டி தன் பிறந்தநாளை கொண்டாடினார்.
அப்போது பேசிய அவர், “இந்த பிறந்தநாளுக்கு எந்த பெரிய கொண்டாட்டமும் இல்லை. நான் எழுந்த போது என் மகன் எனக்கு ஒரு போர்டை பரிசாக கொடுத்தான். அதை அவனே இரண்டு நாட்களாக செய்து எனக்கு கொடுத்தான். அது எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது ” என்று கூறினார்.
ஹர்திக் பாண்டியா தன் மகனின் பிறந்தாளை பெரிய அளவில் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். தன் மகனின் முதல் பிறந்தநாளை பாஸ் பேபி எனும் ஆங்கில திரைப்பட அம்சங்கள் கொண்ட அலங்காரம் செய்து கொண்டாடினார்.
இரண்டாவது பிறந்தநாளை ஜுராசிக் பார்க் திரைப்பட அம்சங்கள் கொண்ட அலங்காரம் செய்து கொண்டாடினார். அப்போது அவர் 2022 டி20 உலகக்கோப்பை தொடரில் ஆடியதால் மகனுடன் இருக்க முடியவில்லை என ஏக்கம் கொண்டு ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார்.
தற்போது அவரது 30வது பிறந்தநாளை அவர் மகனுடன் கொண்டாட முடியவில்லை என வருத்தத்தில் இருந்தாலும், மகன் தந்த பரிசை வாங்கி நெகிழ்ந்துள்ளார்.