இந்தி மொழிபெயர்ப்பாளர் தேர்வு அறிவிப்பு!
Oct 19, 2025, 12:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தி மொழிபெயர்ப்பாளர் தேர்வு அறிவிப்பு!

Web Desk by Web Desk
Oct 12, 2023, 05:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பணியாளர் தேர்வு ஆணையம், கணினி அடிப்படையில் “இளநிலை இந்தி மொழிபெயர்ப்பாளர், இளநிலை மொழிபெயர்ப்பாளர் மற்றும் முதுநிலை இந்தி மொழிபெயர்ப்பாளர் தேர்வு, 2023”-க்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தெற்கு மண்டலத்தில் 318 தேர்வர்கள் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேசத்தில் கர்னூல், விசாகப்பட்டினம், விஜயவாடா, தெலங்கானாவில் ஐதராபாத், தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, திருநெல்வேலி என 7 நகரங்களைச் சேர்ந்த 7 மையங்களில் தேர்வு நடைபெறும்.

தென் மண்டலத்தில் இத்தேர்வு 16.10.2023, அன்று காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை ஒரே ஷிப்டாக நடைபெறும்.

தேர்வு நடைபெறும் தேதிக்கு 4 நாட்களுக்கு முன்பிருந்தும், பிறகு அவரவர் தேர்வு நாள் வரை மட்டும் பணியாளர் தேர்வாணைய வலைத்தளத்தில் இருந்து மின்னணு – தேர்வு அனுமதி சீட்டை விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ள இயலும்.

இந்த விவரங்கள் விண்ணப்பதாரர்களுக்கு அவர்களது செல்போன் எண்ணிற்கு எஸ்எம்எஸ் வாயிலாகவும், ஆன் லைன் விண்ணப்பத்தில் தெரிவித்த மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

கைக்கடிகாரங்கள், புத்தகங்கள், துண்டு காகிதங்கள், பத்திரிகைகள், மின்னணு சாதனங்களை (செல்போன், புளுடூத், ஹெட்போன், பேனா/ பட்டன் ஹோல்/ ஸ்பை கேமராக்கள்,  ஸ்கேனர், கால்குலேட்டர்  ஸ்டோரேஜ் சாதனங்கள் உள்ளிட்டவை) தேர்வு அறைக்குள் கொண்டு வர கண்டிப்பாக அனுமதி கிடையாது.

அதுபோன்ற பொருட்கள் எதையும் தேர்வு அறைக்குள் விண்ணப்பதாரர்கள்  வைத்திருப்பது கண்டறியப்பட்டால், அவர்களின் விண்ணப்பங்கள் ரத்து செய்ய நேரிடுவதுடன், சட்ட/ குற்றவியல் ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மேலும் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர் அடுத்த 3 -7  ஆண்டுகள் வரை தேர்வு எழுத தடை விதிக்கப்படும். எனவே, தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் பைகள் எதையும்  தேர்வு மையத்திற்கு எடுத்து வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மின்னணு தேர்வுக் கூட அனுமதி சீட்டு மற்றும்  அசல் அடையாள ஆவணமின்றி, விண்ணப்பதாரர்கள் யாரும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே அனைத்து விண்ணப்பதாரர்களும் தங்களது மின்னணு தேர்வுக் கூட அனுமதி சீட்டை தவறாமல் பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும்.

மேலும் விவரங்கள்/ சந்தேகங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தென் மண்டல அலுவலகத்தின் உதவி எண்கள் (லேண்ட்லைன்- 044 2825 1139 & செல்பேசி: 94451 95946) வாயிலாகத் தொடர்புகொள்ளலாம்.

Tags: sscexam
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்திற்கு இரண்டு மடங்கு நிதி ஒதுக்கீடு செய்த மத்திய அரசு!

Next Post

இரண்டாம் கட்ட அகழாய்வு: திமில் காளை சிற்பம் கண்டுப்பிடிப்பு!

Related News

உடுமலை அருகே காட்டாற்று வெள்ளம் – அமணலிங்கேஸ்வரர் கோயிலை சூழ்ந்தபடி சென்ற நீர்!

OP SINDOOR வெறும் டிரைலர்தான் : பிரம்மோஸ் வளையத்தில் பாகிஸ்தான் – ராஜ்நாத சிங்!

தேனி மாவட்டத்தில் தொடர் மழை – வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

சென்னை தியாகராயர் நகரில் கனைகட்டிய தீபாவளி விற்பனை!

சென்னையில் தொடர் மழை – பட்டாசு விற்பனை மந்தம்!

ஆபரேஷன் சிந்தூர் வெறும் டிரைலர்தான் – ராஜ்நாத் சிங்

Load More

அண்மைச் செய்திகள்

நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் திமுக அசிங்கப்படும் போதெல்லாம் மடைமாற்றும் கதைகளை கொண்டு வரும் திமுக – அண்ணாமலை விமர்சனம்!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நல நிதியாக ரூ. 20 லட்சம் – வங்கிக்கணக்கில் வரவு வைத்துள்ளதாக விஜய் அறிவிப்பு!

கரூரில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க சட்ட முன்னெடுப்புகளை மேற்கொள்கிறேன் – விஜய் தகவல்!

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் புறப்பட்ட மக்கள் – டெல்லி ரயில் நிலையத்தில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு!

கொடைக்கானல், வேலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி – அதிகாரிகளுடன் வாக்குவாதம்!

திருப்பூர் பேருந்து நிலையத்தில் அலைமோதிய கூட்டம் – பயணிகளை வரிசையாக நிற்க வைத்து அனுப்பிய போலீசார்!

தீபாவளி கொண்டாட சொந்த ஊர் செல்லும் மக்கள் – தாம்பரம் ரயில் நிலையத்தில் அலைமோதிய கூட்டம்!

கோவை, நீலகிரி உள்ளிட்ட 8 மாவடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

பெற்றோர்களே உஷார் : எல்லை மீறும் ChatGPT- சிறப்பு தொகுப்பு!

ஆற்காடு அருகே கடும் போக்குவரத்து நெரிசல் – அவசர அவசரமாக திறக்கப்பட்ட பாலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies