பாரதத்தை ரிஷிகள் உருவாக்கினார்கள். சன்னியாசிகள் அனைவரும் இந்த மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் பாடுபட்டவர்கள் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் டாக்டர் மோகன் பகவத் தெரிவித்தார்.
புது டெல்லியில் ஆர்.எஸ்.எஸ். மூத்த செயல்பாட்டாளர் ரங்கா ஹரி எழுதிய நூல் வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் டாக்டர் மோகன் பகவத் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், பாரத நாட்டில் வேற்றுமைகள் இருந்தாலும், நாம் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறோம். ஒருவருக்கு ஒருவர் சண்டையிடக் கூடாது. நாம் அனைவரும் உலகத்திற்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும்.
நாம் தேசிய ஒற்றுமையோடு இருக்க வேண்டும் என்றால் நமக்கு தாய்நாடு முக்கியம். இந்த பாரத நாடு கடந்த 5 ஆயிரம் வருடங்களாக மதச்சார்பற்ற நாடாக திகழ்ந்து வருகிறது.
ஒட்டுமொத்த உலகமும் நமது குடும்பமே. உலகத்தின் நன்மைக்காகவே பாரதம் உருவாக்கப்பட்டது. பாரதத்தைச் ரிஷிகள் உருவாக்கினார்கள். ரிஷிகள் அனைவரும் இந்த மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் பாடுபட்டவர்கள் என்றார்.