பாதுகாப்புத் துறையில் இந்தியா உடன் பிரான்ஸ் ஒப்பந்தம்!
Oct 18, 2026, 12:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாதுகாப்புத் துறையில் இந்தியா உடன் பிரான்ஸ் ஒப்பந்தம்!

Murugesan M by Murugesan M
Oct 12, 2023, 05:13 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாதுகாப்பு அமைச்சரும், பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சரும் பாரீசில் பாதுகாப்பு தொடர்பான 5-ம் ஆண்டு பேச்சுக்களில் ஈடுபட்டனர்; பாதுகாப்பு தொழில்துறை ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டது

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஐரோப்பிய சுற்றுப்பயணத்தை நிறைவு செய்வதற்கு முன்பாக, பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர்  செபாஸ்டியன் லெகார்னுவுடன்  பாதுகாப்பு தொடர்பான 5-ம் ஆண்டு பேச்சுக்களில் ஈடுபட்டார்.

பாதுகாப்பு தொழில்துறை ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் வகையில், பிராந்திய நிலைமையை மதிப்பிடுவது முதல் தற்போது நடைபெற்று வரும் இருநாடுகளின் ராணுவத்திற்கு இடையேயான பேச்சுக்கள் வரை இருவரும் விரிவாக விவாதித்தனர்.

நடைமுறையில் உள்ள பாதுகாப்பு தொடர்பான திட்டங்களை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். இரு நாடுகளின் பாதுகாப்புத் தொழில்துறைகளுக்கு இடையோயான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விவாதித்தனர்.

விண்வெளி, இணையதளம் செயற்கை நுண்ணறிவு போன்ற முக்கிய களங்களில் சாத்தியமான ஒத்துழைப்பு குறித்தும் அவர்கள் விவாதித்தனர். கூட்டத்திற்கு முன்னதாக பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சகத்தின் ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது.

முன்னதாக, பாரீஸ் அருகே ஜென்னெவில்லியர்ஸில் உள்ள சஃப்ரான் எஞ்சின் பிரிவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தைப் பார்வையிட்ட ராஜ்நாத் சிங், விமான – எந்திர  தொழில்நுட்பத்தின் சமீபத்திய முன்னேற்றங்களைப் பார்வையிட்டார்.

இந்தியாவுடன் ஒத்துழைப்பதற்கான திட்டங்கள் குறித்து கவனம் செலுத்தும் வகையில் ஃபிரான்சின் முன்னணி பாதுகாப்பு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளையும் அவர் சந்தித்தார்.

வளரும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் உட்பட இந்தியாவில் வளர்ச்சி மற்றும்  உற்பத்தியின் நன்மைகளைத் திரு ராஜ்நாத் சிங் எடுத்துரைத்தார். ஒரு பெரிய, திறன்மிக்க மனிதவளம், உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு மற்றும் வலுவான சட்ட கட்டமைப்பு போன்ற இந்திய சந்தையின் உள்ளார்ந்த நன்மைகளை அவர் சுட்டிக்காட்டினார். அக்டோபர் 10, அன்று பாரிஸ் வந்தடைந்த பாதுகாப்பு அமைச்சர்,  அங்குள்ள இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடினார்.

தமது இரு நாட்டு சுற்றுப்பயணத்தின் முதல் கட்டமாக, ரோம் நகரில் இத்தாலிய பாதுகாப்பு அமைச்சர் கைடோ குரோசெட்டோவை, ராஜ்நாத் சிங் சந்தித்துப் பேசினார்.

பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக் கொள்கை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, ராணுவத் துறையில் கல்வி, கடல்சார் கள விழிப்புணர்வு, பாதுகாப்புத் தகவல்களைப் பகிர்தல் மற்றும் கூட்டு மேம்பாடு, இணை உற்பத்தி மற்றும் கூட்டு முயற்சிகளை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்புத் துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

தமது பயணத்தின் ஒரு பகுதியாக ரோம் நகரில் இத்தாலி பாதுகாப்பு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் பிற உயர்நிலை தொழில்துறை தலைவர்களையும்  ராஜ்நாத் சிங் சந்தித்தார்.

Tags: Rajnath Singh
Share
Tweet
SendShare
Previous Post

பேரணிக்கு அனுமதி தேவை – நீதிமன்றம் சென்ற ஆர்.எஸ்.எஸ். – முழு விவரம்!

Next Post

பாரதத்தை ரிஷிகள் உருவாக்கினார்கள் – டாக்டர் மோகன் பகவத் பேச்சு!

Related News

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

Load More

அண்மைச் செய்திகள்

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies