முகேஷ் அம்பானி தனது குடும்பத்தினருடன் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் கோவிலில் இன்று சுவாமி தரிசனம் செய்தார்.
உத்தராகாண்டத்தில் உள்ள, உருத்ர பிரயாக் மாவட்டத்தில், கேதார்நாத்தில் மந்தாகினி ஆற்றங்கரையில் கார்வால் இமயமலைத் தொடரில் அமைந்துள்ள கேதார்நாத் கோவில் இந்தியாவில் ஒரு முக்கிய புனித ஸ்தலமாக கருதப்படுகிறது.
இந்த புனித ஸ்தலத்திற்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரும், தொழிலதிபருமான முகேஷ் அம்பானி இன்று தன் குடும்பத்தினருடன் சென்றுள்ளார்.
முகேஷ் அம்பானி பத்ரிநாத் சென்றடைந்ததும், கேதார்நாத் கோவில் கமிட்டியின் துணைத் தலைவர் கிஷோர் பவார் அவரையும் அவரது குடும்பத்தாரையும் கோவிலுக்கு வரவேற்றார். அழகிய இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள இந்த கோவில் இந்துக்களுக்கு மகத்தான மத முக்கியத்துவம் வாய்ந்த கோவிலாக உள்ளது.
இந்த சிறப்புமிக்க கோவிலில் முகேஷ் அம்பானி அவரது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்.
உத்தரகாண்ட்டில் அமைந்துள்ள இந்த புனித ஸ்தலத்திற்கு இறைவனை நாடி சென்ற அம்பானியின் குடும்பம் இறை அருளைப் பெற்றிப்பார்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை.