பொது மக்கள், தொழில் அதிபர்கள் எனப் பலரும் தங்களது சேமிப்பு மற்றும் முதலீட்டைப் பெருக்கும் வகையில் கிரிப்டோ கரன்ஸியில் எத்தோரியம், பிட்காயினில் முதலிடூ செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஆனால், அப்பாவி மக்களிடம் இருந்து கிரிப்டோ நாணயத்தைத் திருடுவதில் கைதேர்ந்தவர்களாக உள்ளனர் ஹமாஸ் தீவிரவாதிகள். அதாவது கடந்த 2021-ல் மேற்கு டெல்லியில் தொழில் அதிபர் ஒருவருடைய கிரிப்டோ வாலட்டில் இருந்து 40 மில்லியன் மதிப்புள்ள கிரிப்டோ கரன்ஸி திருடப்பட்டுள்ளது.
புகாரின் பேரில் களம் இறங்கிய டெல்லி காவல்துறை ஒரு கட்டத்தில் ஓய்ந்து போனது.பின்னர், சைபர் க்ரைம் மற்றும் டெல்லி சிறப்புப் பிரிவு போலீசார் இணைந்து துப்பறிந்தனர். அதில், அந்த தொழில் அதிபரின் கணக்கிலிருந்து கிரிப்டோ கரன்ஸி திருடப்பட்டதைக் கண்டுபிடித்தனர். ஆனால், அந்தப் பணம் யாருக்குச் சென்றது என்பதைக் கண்டறிய முடியவில்லை.
உடனே, இன்டர்போல் போலீசார் மூலம் இஸ்ரேலிலின் உளவுத்துறையான மொசாட் உதவியை நாடினர். அவர்கள் இது குறித்துத் துப்பறிந்து மிகவும் ஒரு அதிர்ச்சியான தகவலை இந்திய அதிகாரிகளுக்குத் தெரிவித்தனர். அது என்னவென்றால், ஹமாஸ் தீவிரவாத குழுக்களுக்கு கிரிப்டோ கரன்ஸி மாற்றப்பட்டுள்ளதைத் தெரிவித்துள்ளனர்.
இறுதியாக, இந்த பணம், காசாவில் உள்ள நசீர் இப்ராஹிம் அப்துல்லா, கிசாவில் அகமத் மர்சூக், ரமலாவில் உள்ள அஹமட் கியூஎச் சஃபி ஆகியோர் கணக்கில் சென்று அடைந்ததை உறுதி செய்தனர். ஆனால், அந்த பணத்தை மீட்க முடியவில்லை.
தற்போது, இஸ்ரேல் – ஹமாஸ் படை இடையே போர் நடைபெறுவதால், ஆயுதம் உள்ளிட்டவை வாங்கப் பணத் தேவைக்காக ஹமாஸ் குழுக்கள் மீண்டும் தங்கள் கைவண்ணத்தைக் காட்டும் வாய்ப்பு அதிகம். எனவே, மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கை மணி அடித்துள்ளனர் போலீசார்.