இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் திருச்சி பேராசிரியை!
Oct 16, 2026, 08:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் திருச்சி பேராசிரியை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 13, 2023, 04:10 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இஸ்ரேலில் திருச்சியைச் சேர்ந்த பேராசிரியை ஒருவர் சிக்கித் தவிக்கும் தகவல் வெளியாகி இருக்கும் நிலையில், அவர் போர் நடக்கும் காஸா நகருக்கு வெகு அருகாமையில் இருக்கும் தகவல் தெரியவந்திருக்கிறது.

இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தைச் சேர்ந்த தன்னாட்சி பெற்ற காஸா நகரத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் திடீரென அறிவிக்கப்படாத போரைத் தொடுத்தனர். இதையடுத்து, ஹமாஸ் தீவிரவாதிகளை வேரோடு அழிப்போம் என்று கூறி, இஸ்ரேல் போரை தொடங்கி இருக்கிறது. இப்போர் உக்கிரமடைந்திருக்கும் நிலையில், இந்தியாவிலிருந்து இஸ்ரேல் சென்ற பலரும் போர்ச் சூழலில் சிக்கித் தவித்து வருகின்றனர். முதல்கட்டமாக மத்திய பா.ஜ.க. அரசு 212 பேரை இஸ்ரேலில் இருந்து மீட்டுக் கொண்டு வந்திருக்கிறது. மற்றவர்களையும் மீட்க முயற்சி நடந்து வருகிறது.

இந்த நிலையில், சிறப்புப் பயிற்சி பெறுவதற்காக சென்றிருந்த திருச்சி பேராசிரியை ஒருவரும் இஸ்ரேலில் சிக்கித்தவித்து வரும் தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வேளாண் படிப்பு, ஆராய்ச்சி, பொறியியல், இயற்பியல், வேதியியல் போன்ற உயர் படிப்புகளுக்காக இஸ்ரேல் நாட்டிற்கு செல்வது வழக்கம். இதற்காக இங்குள்ள பல்கலைக்கழகங்கள் பலவும் இஸ்ரேல் நாட்டு பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்திருக்கின்றன. அந்த வகையில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகமும் இஸ்ரேல் நாட்டிலுள்ள 2 வேளாண் பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு செய்திருக்கிறது.

குறிப்பாக, நீர்வள தொழில்நுட்பம், நானோ தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மேம்பாடு குறித்த ஆய்வு, ரிமோட் சென்சார் (ட்ரோன்) தொழில்நுட்பம் போன்ற ஆய்வுகளை தொடர்பாக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இதற்காக, இப்பல்கலைக்கழகத்திலிருந்து பலரும்  இஸ்ரேல் நாட்டிற்கு சென்று வருவது வழக்கம். அந்த வகையில், திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரியில் உழவியல் துறை இணைப் பேராசிரியையாக பணிபுரியும் ராதிகா, சொட்டு நீர்ப்பாசனத் தொழில்நுட்பம் தொடர்பான தகவல்களை தெரிந்துகொள்ள இஸ்ரேல் நாட்டிலுள்ள பென்குரியன் பல்கலைக்கழகத்திற்கு கடந்த செப்டம்பர் 23-ம் தேதி சென்றார்.

இவர், திருச்சி கருமண்டபம் வசந்தம் நகரைச் சேர்ந்தவர். பேராசிரியை ராதிகா சென்ற சில தினங்களிலேயே காஸாவின் ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் நாட்டின் மீது தாக்குதலைத் தொடங்கி விட்டனர். பதிலுக்கு இஸ்ரேலும் போரை தொடங்கி இருக்கிறது. இதனால், இஸ்ரேலில் இருந்து வெளியில் வர முடியாத நிலையில் இருக்கும் பேராசிரியை ராதிகா, தான் பாதுகாப்பாக இருப்பதாக தனது கணவருக்கு செல்போன் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி இருக்கிறார்.

இதுகுறித்து பேராசிரியையின் கணவர் ரமேஷ் கூறுகையில், ”நான் திருச்சி வேளாண் பல்கலை.யில் உழவியல் துறைத் தலைவராக இருக்கிறேன். எனது மனைவி ராதிகா, பயிற்சிக்காக இஸ்ரேல் சென்றார். அங்கு பயிற்சி தொடங்கிய சில நாட்களிலேயே போர் சூழல் ஏற்பட்டிருக்கிறது. ராதிகா இருக்கும் இடத்தில் இருந்து தாக்குதல் நடந்த பகுதி வெறும் 60 கி.மீ. தொலைவில்தான் உள்ளது. ராதிகாவுடன், பணி, கல்வி, வர்த்தகம் உட்பட பல்வேறு பணிகளுக்குச் சென்ற சென்னை மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 இந்தியர்கள் இஸ்ரேலில் சிக்கித் தவித்து வருகின்றனர். இவர்களை மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து பத்திரமாக மீட்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

இதனிடையே, இஸ்ரேல் தலைநகரில் சிக்கி இருந்த 212 பேரை மத்திய பா.ஜ.க. அரசு மீட்டுக் கொண்டு வந்திருக்கிறது. இதில், ராதிகா இடம்பெறவில்லை. காரணம், இஸ்ரேல் தலைநகரில் இருந்து வெகுதூரத்தில் காஸாவுக்கு வெகு அருகில் ராதிகா இருக்கிறார். அங்கிருந்து அவரை இஸ்ரேல் தலைநகருக்கு அழைத்து வந்து, அதன் பிறகு இந்தியாவுக்கு மீட்டு வர வேண்டும். ஆகவே, ராதிகாவை மீட்க மேலும் சில தினங்களாகலாம் என்று கூறப்படுகிறது.

Tags: trichyIsraelProffessor
Share
Tweet
SendShare
Previous Post

இந்திய பாகிஸ்தான் போட்டியில் இசை நிகழ்ச்சி !

Next Post

மைசூர் தசரா திருவிழா: உணவு பிரியர்களுக்கு ஒரு குட் நியூஸ்!

Related News

செல்போன் அழைப்புகளின்போது அழைப்பவரின் பெயர் – நவம்பர் 1 முதல் கட்டாயம்!

பழனியில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை!

சங்கரன்கோவிலில் கனமழை – கோயிலுக்குள் புகுந்தது மழை நீர்!

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை!

மதுரையில் ஒரு மணிநேரம் கொட்டித்தீர்த்த மழை!

அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் – வானிலை மையம் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

தொடங்கியது வடகிழக்கு பருவ மழை – 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா விருப்பம் – பிரதமர் மோடி

சபரிமலை மெய்நிகர் வரிசை தரிசன கட்டணம் – ரூ.10 ஆக உயர்த்த தேவசம் போர்டு முடிவு!

வங்கதேசத்தை போன்று கலவரத்தை தூண்டி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த ராகுல் காந்தி முயற்சி – பாஜக குற்றச்சாட்டு!

சென்னை பெரம்பூரில் நடைபெறும் கால்வாய் தூர்வாரும் பணி – முதல்வர் விஜய் ஆய்வு!

உச்ச நீதிமன்றம் நோக்கி பேரணி சென்றது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் – ராகுல் காந்திக்கு நோட்டீஸ்!

லடாக்கில் சுற்றுலா மற்றும் விவசாயத்தை ஊக்கவிக்க பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் – பிரதமர் மோடி

அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க கோரி பாஜக, ஹிந்து அமைப்புகள் ஆர்பாட்டம்!

மதம் மாறிய இந்துக்களுக்கு BC சான்றிதழ் வழங்கக் கூடாது என்ற உயர் நீதிமன்ற உத்தரவு – உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்!

கூகுள் மேப்பை நம்பி போன இளைஞர்கள்; குறுகிய பாதையில் சிக்கிய கார்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies