உலகக்கோப்பை கிரிக்கெட்டில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடரின் 11 வது போட்டி சென்னையில் உள்ள எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது.
இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் தலைவர் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வுச் செய்துள்ளார். இதன் படி முதலில் வங்காளதேச அணி பேட்டிங் செய்யவுள்ளது.
நியூசிலாந்து அணியின் வீரர்கள் :
டிவான் கான்வே, வில் யங், கேன் வில்லியம்சன் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, டாம் லாதம், டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னெர், மேட் ஹென்றி, லோக்கி பெர்குசன் அல்லது சோதி, டிரென்ட் பவுல்ட்.
வங்காளதேச அணியின் வீரர்கள் :
லிட்டான் தாஸ், தன்சித் ஹசன், நஜ்முல் ஹூசைன் ஷன்டோ, ஷகிப் அல்-ஹசன் (கேப்டன்), மெஹிதி ஹசன் மிராஸ், முஷ்பிகுர் ரஹிம், தவ்ஹித் ஹிரிடாய், மெஹதி ஹசன், தஸ்கின் அகமது, ஷோரிபுல் இஸ்லாம், முஸ்தாபிஜூர் ரகுமான் அல்லது நசும் அகமது.