வறுமை இல்லாத உலகை உருவாக்குவதற்கான உலக வங்கியின் புதிய திட்டத்திற்கு இந்தியா ஆதரவளிக்கிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மொராக்கோவின் மராகேச்சில் நேற்று நடைபெற்ற வளர்ச்சிக் குழுவின் 108வது கூட்டத்தில் உலக வங்கியின் ஆளுநராக மத்திய நிதியமைச்சர் நிர்மலா பங்கேற்றார். கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல் “வாழும் கிரகத்தில் வறுமையை முடிவுக்குக் கொண்டுவருதல் – உலக வங்கியின் பரிணாம வளர்ச்சி குறித்து ஆளுநர்களுக்கு அறிக்கை” என்பதாகும்.
கூட்டத்தில் பேசிய சீதாராமன், வளர்ச்சி தாக்கத்தை அதிகரிப்பதற்கான தேசிய மற்றும் உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள ‘சிறந்த, பெரிய மற்றும் மிகவும் பயனுள்ள’ உலக வங்கியை உருவாக்கும் G20 நாடுகளின் பொதுவான இலக்கை நோக்கி முன்னேறுவது ஊக்கமளிக்கிறது.
இன்றைய சவாலான காலகட்டத்தில் 2030 நிலையான அபிவிருத்தி இலக்குகளை நோக்கிய முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதற்கு, மாற்றமான அணுகுமுறைக்கு அழைப்பு விடுக்கிறது என்று வலியுறுத்தினார்.
வாழக்கூடிய பூமியில் வறுமை இல்லாத உலகை உருவாக்குவதற்கான உலக வங்கியின் புதிய தொலைநோக்கு பார்வையையும், தீவிர வறுமையை ஒழிப்பதற்கான அதன் புதிய பணியையும் இந்தியா ஆதரிக்கிறது என்று தெரிவித்தார்.