நாட்டில் மகளிர் தொழிலாளர்களின் பங்கேற்பு விகிதம் 2023 ஆம் ஆண்டில் 4.2 சதவீதம் அதிகரித்து 37.0 சதவீதமாக அதிகரித்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அக்டோபர் 9-ம் தேதி அன்று புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு அறிக்கை 2022-23-ன் படி, நாட்டில் பெண் தொழிலாளர்களின் பங்கேற்பு விகிதம் 2023 ஆம் ஆண்டில் 4.2 சதவீதம் அதிகரித்து 37.0 சதவீதமாக அதிகரித்துள்ளது.
நீண்டகால சமூக-பொருளாதார மற்றும் அரசியல் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட கொள்கை முன்முயற்சிகள் மூலம், பெண்களுக்கு அதிகாரமளிப்பதை உறுதி செய்வதற்காக அரசு நிர்ணயித்த தீர்க்கமான செயல்பாடுகளின் விளைவாக, பெண் தொழிலாளர்கள் பங்கேற்பு விகிதத்தில் இந்த குறிப்பிடத்தக்க அதிகரிப்பு உள்ளது.
பெண் கல்வி, திறன் மேம்பாடு, தொழில் முனைவோருக்கான வசதி, பணியிடத்தில் பாதுகாப்பு உள்ளிட்ட பெண்களின் வாழ்க்கைச் சுழற்சியில் அரசின் முன்முயற்சிகள் விரிவடைந்துள்ளன.