வந்தே பாரத்தைத் தொடர்ந்து வந்தே சதர்ன் இரயில்!
Mar 15, 2026, 08:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வந்தே பாரத்தைத் தொடர்ந்து வந்தே சதர்ன் இரயில்!

சென்னை ஐ.சி.எஃப்.பில் தயாராகி வருகிறது!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 13, 2023, 06:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வந்தே பாரத் இரயிலைத் தொடர்ந்து, ஏ.சி. வசதி இல்லாத சாதாரண பெட்டிகளைக் கொண்ட வந்தே சதர்ன் இரயில்களை நாடு முழுவதும் இயக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. 8 முன்பதிவு இல்லாத பெட்டிகள் உட்பட 22 பெட்டிகளைக் கொண்ட வந்தே சதர்ன் இரயில் பெட்டிகள் சென்னை ஐ.சி.எஃப். தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

முழுக்க முழுக்க ஏ.சி. வசதி கொண்ட வந்தே பாரத் அதிவிரைவு இரயில்களை மத்திய அரசு நாடு முழுவதும் அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி, தற்போது வரை 34 வந்தே பாரத் இரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த இரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. அதேசமயம், கட்டணம் கொஞ்சம் கூடுதலாக இருப்பதால், சாமானிய மக்களால் பயணிக்க முடியவில்லை. ஆகவே, வந்தே பாரத் இரயில்களுக்கு இணையாக சாமானிய மக்கள் பயணிக்கும் வகையில், ஏ.சி. வசதி இல்லாத வந்தே சதர்ன் இரயில்களை இயக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.

முன்பதிவு இல்லாத 8 பெட்டிகளுடன் மொத்தம் 22 பெட்டகள் இந்த இரயிலில் இடம்பெற்றிருக்கும். இந்த வந்தே சதர்ன் இரயிலின் முதல் இரயிலுக்கான பெட்டிகள் சென்னை ஐ.சி.எஃப். ஆலையில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் இரயிலில் சில மாற்றங்களை செய்து வந்தே சதர்ன் இரயில் பெட்டிகள் உருவாக்கப்படுகின்றன. பெரம்பூரில் உள்ள கேரேஜ் மற்றும் லோகோ ஒர்க்சில் ஏரோடைனமிக் முகப்பு தோற்றம் கொண்ட 2 இன்ஜின்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. இம்மாத இறுதியில் வந்தே சதர்ன் இரயில்கள் இயக்கப்படும் வகையில் தயாரிப்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டிருக்கின்றன.

இந்த வந்தே சதர்ன் இரயிலில் சுமார் 1,800 பயணிகள் பயணிக்க முடியும். இந்த இரயில் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் செல்லும். ஏ.சி. இல்லாத மற்றும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணிக்க விரும்பும் பயணிகளுக்கு வந்தே பாரத் இரயிலின் அதே பயண அனுபவத்தை வழங்கும் வகையில் வந்தே சதர்ன் இரயில்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. அழகான இருக்கைகள், படுக்கை வசதிகளுடன் நவீன விளக்குகளும் பொருத்தப்படுகின்றன. இதன் உட்புறம் தற்போதைய இரயில்களின் பொதுப்பெட்டிகள் போன்றே வடிவமைக்கப்படுகிறது.

அதேசமயம், மின் விசிறிகள், ஸ்விட்சுகள் நவீன வடிவமைப்பை கொண்டதாக இருக்கும். ஒவ்வொரு இருக்கையிலும் மொபைல் போன் சார்ஜர் வசதிகள் இருக்கும். மேலும், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் ஒரு கழிப்பறையும் இடம்பெறும். இந்த இரயில் வந்தே பாரத் இரயிலுக்கு இணையான வேகத்தில் செல்லும். 2 முனைகளிலும் இன்ஜின்கள் இருக்கும். இது பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்தும். இந்த இரயில் தயாரிக்கப்படுவதை இரயில்வே அதிகாரிகள் இன்று ஐ.சி.எஃப். ஆலையில் பார்வையிட்டனர்.

Tags: ChennaiVande Southern TrainICF
ShareTweetSendShare
Previous Post

சென்னிமலையை காப்பாற்ற பொது மக்கள் போராட்டம்!

Next Post

புதிய விருதுடன் தில்லாக நிற்கும் கில் !

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies