நவம்பர் 9-ம் தேதி தென்காசி-காசி தீபாவளி சுற்றுலா இரயில்!
Oct 27, 2025, 04:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நவம்பர் 9-ம் தேதி தென்காசி-காசி தீபாவளி சுற்றுலா இரயில்!

முன்பதிவு செய்ய அழைப்பு!

Web Desk by Web Desk
Oct 14, 2023, 12:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்காசியில் இருந்து நவம்பர் 9-ம் தேதி புறப்படும் பாரத் கௌரவ் எனப்படும் தீபாவளி சுற்றுலா இரயிலில் காசிக்குச் செல்ல விருப்பமுள்ள பயணிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்திய இரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி. சுற்றுலாப் பயணிகளுக்காக பாரத் கௌரவ் என்கிற பெயரில் சுற்றுலா இரயிலை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த இரயில், தீபாவளி கங்கா ஸ்நானம் சிறப்பு யாத்திரை என்கிற பெயரில் தென்காசியில் இருந்து நவம்பர் 9-ம் தேதி புறப்படுகிறது.

இந்த சுற்றுலா இரயில், தென்காசியில் புறப்பட்டு ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், சென்னை, காசி, அலகாபாத், கயா வழியாக காசியைச் சென்றடையும். அங்கு, தீபாவளி தினத்தன்று காசியில் உள்ள கங்கை நதியில் புனித நீராடுதலுடன் சுற்றுலா தொடங்குகிறது.

பின்னர், இந்த இரயில், நவம்பர் 16-ம் தேதி இராமேஸ்வரத்தை வந்தயும். தொடர்ந்து, இராமேஸ்வரத்தில் இராமநாதசுவாமி தரிசனத்தோடு சுற்றுலா நிறைவடையும். பிறகு, நவம்பர் 17-ம் தேதி இந்த இரயில் மீண்டும் தென்காசியை சென்றடையும். இந்த இரயிலில் 3 அடுக்கு குளிர்சாதன பெட்டிகள், 8 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், ஒரு பேட்டரி கார், 2 பவர் கார்கள் உள்ளிட்ட வசதிகள் இடம்பெறும்.

மேலும், சுற்றுலாப் பகுதிகளை பார்வையிட பஸ் போக்குவரத்து, தென்னிந்திய சைவ உணவுகள், சுற்றுலா மேலாளர், தனியார் பாதுகாவலர், பயண காப்புறுதி, ஏ.சி. மற்றும் ஏ.சி. வசதி இல்லாத தங்கும் இடம் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்து தரப்படும். தவிர, மத்திய, மாநில அரசு பொதுத்துறை ஊழியர்கள் பயணித்தால் எல்.டி.சி. சான்றிதழ் வழங்கப்படும்.

இந்த சுற்றுலாவுக்கு பயணக் கட்டணமாக படுக்கை வசதிக்கு 16,850 ரூபாயும், மூன்றடுக்கு ஏ.சி. வகுப்புகளுக்கு 30,500 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. மொத்தமுள்ள 600 இருக்கைகளில் இதுவரை 300-க்கும் மேற்பட்ட இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன. எனவே, பயணிகள் விரைந்து இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளும்படி, ஐ.ஆர்.சி.டி.சி. தென்மண்டல பொதுமேலாளர் ராஜலிங்கம் பாஸு தெரிவித்திருக்கிறார்.

Tags: tourist trainBharat GouravTenkasi-Kasi
ShareTweetSendShare
Previous Post

இந்தியா – பாகிஸ்தான் : வரலாறு தொடருமா ?

Next Post

ஆமதாபாத் மைதானத்துக்கு பலத்த பாதுகாப்பு!

Related News

சாலைகளில் குளம் போல் தேங்கிய கழிவுநீர் : அலட்சியமாக செயல்படும் மாநகராட்சி அதிகாரிகள்!

விருப்பம் போல் செயல்படும் AI – மனித பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?

ஜார்கண்டில் மருத்துவ அலட்சியம் : 5 சிறுவர்களுக்கு HIV பாதிப்பு – பெற்றோர்கள் அதிர்ச்சி!

பாரத மாதா உங்களை தேடுகிறாள்! வரவேற்கிறாள்! – வெளிநாடுவாழ் இந்தியர்கள் தாயகம் திரும்ப ஸ்ரீதர் வேம்பு அழைப்பு!

கபடியில் தங்கம் வென்ற கார்த்திகா : கண்ணகி நகர் சிங்கப்பெண்!

5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா – சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவை!

Load More

அண்மைச் செய்திகள்

வேலூர் : ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை சூழ்ந்த ஏரி நீர்!

100 வயதில் பிரபல நடிகை மரணம்!

மருது சகோதரர்களின் 224வது குருபூஜை : சிவகங்கை மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு!

காஞ்சிபுரம் : உலக நன்மை வேண்டி நடைபெற்ற ஸ்ரீ மகாலட்சுமி சுமங்கலி பூஜை!

முக்கிய நகரத்தை கைப்பற்றியதாக கிளர்ச்சி குழு அறிவிப்பு – சூடான்

ஸ்ரீபெரும்புதூரில் திடீரென பெயர்ந்து சேதமான சாலை – வாகன ஓட்டிகள் அவதி!

ஐஎஸ்ஐஎஸ் கோராசன் பயங்கரவாத அமைப்பைப் பாகிஸ்தான் தூண்டிவிடுவதாக ஆப்கானிஸ்தான் குற்றச்சாட்டு!

மீண்டும் ராஜதந்திரக் குழப்பத்தைத் தூண்டியுள்ள வங்கதேசத்தின் இடைக்காலத் தலைவர் முகமது யூனுஸ்!

கந்தசஷ்டி விழாவை ஒட்டி தண்டு விரதம் மேற்கொண்ட பக்தர்கள்!

தெலங்கானா : சிறுமியை கடித்து குதறிய நாய்கள் – அதிர்ச்சி சிசிடிவி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies