இதற்காகக் கேரள மாநிலம் கொச்சினில் உருவாக்கப்பட்ட ‘செரியபாணி’ என்ற பெயர் கொண்ட பயணிகள் கப்பல், நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு 7 -ம்தேதி வந்தது. 8 -ம் தேதியோ நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைக்குச் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. 10 -ம் தேதியே தொடங்க வேண்டிய பயணிகள் கப்பல் போக்குவரத்து, ஒரு சில காரணங்களால் 14 -ம் தேதிக்கு மாற்றப்பட்டது.
அதன்படி, தமிழ்நாட்டின் நாகையிலிருந்து இலங்கைக்குப் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை, காணொளி கான்பரன்சிங் மூலம் டெல்லியிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய பிரமதர் மோடி, இந்தியாவும் இலங்கையும் இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது, நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையே படகு சேவையைத் தொடங்குவது உறவுகளை வலுப்படுத்தும் ஒரு முக்கிய மைல்கல். இந்தியா – இலங்கை இடையிலான கலாச்சாரம், வர்த்தகம் மற்றும் நாகரீகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நாகப்பட்டினம் அருகில் உள்ள நகரங்கள் மற்றும் பூம்புகார் துறைமுகம் உள்ளிட்டவை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை என்று சுட்டிக் காட்டினார்.
இதனிடையே, நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைக்குப் பயணம் செய்ய நபர் ஒன்றுக்குக் கட்டணம் ரூ.6,500 மற்றும் ஜிஎஸ்டி 18% என மொத்த கட்டணம் ரூ7,670 ஆகும். 75 சதவீத கட்டண சலுகையில் ரூ.2,375 ஜிஎஸ்டி 18 சதவீதம், சிற்றுணவு என மொத்தமாக ரூ.2,803 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் அதிகமான நபர்கள் சீட்டு முன்பதிவு செய்ய வாய்ப்புள்ளது.
இந்த புதிய கப்பல் மூலம் பாரதம் – இலங்கை இடையே புதிய அத்தியாயம் படைத்துள்ளது.