வாக்காளர்களைக் கவர புதிய புதிய ரூட்டில் களம் இறங்கி வருகிறது அரசியல் கட்சிகள். குறிப்பாக இளைஞர்களை தங்கள் பக்கம் ஈர்க்க பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், வாட்ஸ் அப், எக்ஸ், என டிஜிட்டல் யூகத்தைத் தனதாக்கிக் கொண்டு சமூகவலைத்தள பக்கங்களைப் பயன்படுத்தி வருகின்றனர் அரசியல் கட்சியினர்.
அந்த வகையில், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்டுள்ளது வாட்ஸ் அப் செயலி. பேஸ்புக் நிறுவனத்திற்குச் சொந்தமான மெட்டா நிறுவனத்தின் ஒரு அங்கம் வாட்ஸ்அப் நிறுவனம் . இந்த நிறுவனம் புதிய புதிய அட்டேட்டை வெளியிட்டுள்ளது.
இதில், புதிய தகவல்களை அண்மையில் வெளியிட்டது. இதில், வாட்ஸ்அப் சேனல் மிகவும் முக்கியமானது. இதில், பாரத பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர் மற்றும் பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் வாட்ஸ்அப் சேனலில் இணைந்துள்ளனர். இந்த புதிய சேனலில் இணைந்துள்ளார் முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின்.
பாரத பிரதமர் மோடிக்கு வாட்ஸ் அப் சேனலில் 9.5 மில்லியன் பாலோயர்ஸ்களை கொண்டுள்ளார். ஆனால், மு.க.ஸ்டாலின் வெறும் 256 பாலோயர்ஸ்களை மட்டுமே கொண்டுள்ளார் என கூறப்படுகிறது. இதில், வேடிக்கை என்னவென்றால் சினிமா நடிகை சன்னி லியோனை 6.9 மில்லியன் பாலோயர்ஸ் பின் தொடர்கிறார்கள்.
இண்டி கூட்டணியின் மிகத் தலைவர்கள் எனக் கூறப்படும் மு.க.ஸ்டாலின், வெறும் 256 பாலோயர்ஸ்களை கொண்டுள்ளது பலரையும் கடும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. அதே வேளையில், ஒரு அரசியல் கட்சித் தலைவருக்கு மக்கள் செல்வாக்கு இவ்வளவுதானா என சமூகவலைத்தளங்களில் கமெண்ட் அடித்து வருகின்றனர்.