சென்னை உயர் நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களில் ஆண் வழக்கறிஞர்கள் ஜீன்ஸ் பேண்ட், முக்கால் பேண்ட், மற்றும் பெண் வழக்கறிஞர்கள் லெக்கின்ஸ் அணியக் கூடாது என ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திராவில் புகழ் பெற்ற திருப்பதி மற்றும் ஒரிசாவில் உள்ள பூரி ஜெகன்நாதர் திருக்கோவில் மற்றும் தமிழகத்தில் பல்வேறு திருக்கோவில்களில் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களில் ஆண் வழக்கறிஞர்கள் ஜீன்ஸ் பேண்ட், முக்கால் பேண்ட், மற்றும் பெண் வழக்கறிஞர்கள் லெக்கின்ஸ் அணியக் கூடாது என ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் அதன் தலைவர் அமல்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய பார் கவுன்சில் விதிகளின்படி ஆடை விதிமுறைகள் பின்பற்றவில்லை என்பது தங்கள் கவுன்சிலின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக பார்கவுன்சில் தலைவர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மூத்த வழக்கறிஞர்கள் சிலர் பேசும் போது, நீதிமன்றமும் நமக்கு கோவில் போன்றதுதான். காரணம், ஏழை, எளியவர்கள், ஜாதி, மதம் என அந்தஸ்து என எதையும் பார்க்காமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு, எந்த வித ஒரு எதிர்பார்ப்பம் இன்றி நீதி வழங்குகிறது.
எனவே, இந்த ஆடை கட்டுப்பாடு என்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான். எனவே, இதை நாங்கள் மனதார வரவேற்கிறோம் என்றனர்.