அப்துல் கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார்.
இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
டாக்டர் கலாமின் பணிவான மனப்பான்மையையும், அறிவியல் திறமையையும் பிரதமர் மோடி நினைவு கூர்ந்தார். நாட்டுக்கு அவர் அளித்த ஒப்பற்ற பங்களிப்பு, என்றென்றும் நினைவில் கொள்ளப்படும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
अपने विनम्र व्यवहार और विशिष्ट वैज्ञानिक प्रतिभा को लेकर जन-जन के चहेते रहे पूर्व राष्ट्रपति डॉ. एपीजे अब्दुल कलाम जी को उनकी जयंती पर कोटि-कोटि नमन। राष्ट्र निर्माण में उनके अतुलनीय योगदान को सदैव श्रद्धापूर्वक स्मरण किया जाएगा।
— Narendra Modi (@narendramodi) October 15, 2023
இது குறித்து தனது எக்ஸ் தளத்தில்,
“முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். தேசத்தைக் கட்டியெழுப்புவதில் அவரது ஒப்பற்ற பங்களிப்பு, என்றென்றும் பயபக்தியுடன் நினைவுகூரப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.