நவராத்திரியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி, செழிப்பு, அதிர்ஷ்டம், நல்ல ஆரோக்கியம் ஆகியவற்றைக் கொண்டு வர துர்கா தேவியை பிரதமர் மோடி பிரார்த்தித்தார்.மேலும், நவராத்திரியின் முதல் நாளில் அன்னை ஷைலாபுத்ரியின் காலில் விழுந்து வணங்கினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தின் தொடர்ச்சியான பதிவுகளில் பிரதமர் தெரிவித்திருப்பதாவது:
“நாட்டு மக்களுக்கு நவராத்திரி நல்வாழ்த்துகள். சக்தி பிரதாயினி அன்னை துர்கா, அனைவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி, செழிப்பு, அதிர்ஷ்டம் மற்றும் நல்ல ஆரோக்கியத்தை அருளட்டும். அன்னையே போற்றி!”
“நவராத்திரியின் முதல் நாளில், நான் அன்னை ஷைலாபுத்ரியின் பாதங்களை வணங்குகிறேன். நாட்டு மக்களுக்கு வலிமையையும், செழிப்பையும் அருள்புரியட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.