அங்கன்வாடி குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்த அமித்ஷா!
Jul 25, 2025, 06:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அங்கன்வாடி குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்த அமித்ஷா!

நல்ல கல்வி, சத்தான உணவு, பொம்மைகள் விநியோகிக்க உறுதி!

Web Desk by Web Desk
Oct 15, 2023, 04:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குஜராத் மாநிலத்துக்குச் சென்றிருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தனது காந்திநகர் தொகுதியிலுள்ள அங்கன்வாடி மையத்தின் குழந்தைகளுடன் விளையாடி மகிழந்தார். அப்போது, அங்கன்வாடி குழந்தைகளுக்கு நல்ல கல்வி, சத்தான உணவு மற்றும் பொம்மைகள் விநியோகிக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 3 நாள் பயணமாக குஜராத் மாநிலத்துக்கு நேற்று முன்தினம் சென்றார். நேற்று, தனது காந்திநகர் தொகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்துக்குச் சென்றவர், அங்கிருந்த குழந்தைகளுடன் உரையாடினார். மேலும், அக்குழந்தைகளை அங்குள்ள கேமிங் மண்டலத்துக்கு அழைத்துச் சென்றவர், குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்தார்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டிருக்கும் பதிவில், “இன்று நான் எனது மக்களவைத் தொகுதியிலுள்ள அங்கன்வாடி மையத்தில் இருக்கும் குழந்தைகளுடன் கேமிங் மண்டலத்திற்குச் சென்றேன். அங்கு, குழந்தைகள் தங்களுக்குப் பிடித்த விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனர். இது என்னுடைய நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்டது.

வசதி படைத்த குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு கிடைக்கும் அனைத்து வசதிகளும், மகிழ்ச்சியும் எனது தொகுதியில் உள்ள அங்கன்வாடி மையங்களின் குழந்தைகளுக்குc் கிடைப்பதை உறுதி செய்ய முயற்சிக்கிறேன். இதற்காக, அவர்களுக்கு நல்ல கல்வி மற்றும் சத்தான உணவை வழங்குவதற்கும், பொம்மைகளை வழங்குவதற்கும், விளையாட்டு மண்டலங்களுக்கு அழைத்துச் சென்று மகிழ்விப்பதற்கும் தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குழந்தைகளின் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

आज अपने लोकसभा क्षेत्र के आंगनवाड़ी केंद्रों के बच्चों को लेकर एक गेमिंग जोन में जाना हुआ। यहाँ बच्चों ने अपने मन पसंदीदा गेम्स खेलकर आनंद लिया।

एक सांसद के नाते मेरा प्रयास है कि मेरे लोकसभा क्षेत्र के आंगनवाड़ी केंद्रों के बच्चों को हर संभव सुविधाएँ और खुशियाँ मिलें, जो संपन्न… pic.twitter.com/XP7OnoUqKQ

— Amit Shah (@AmitShah) October 14, 2023

இதைத் தொடர்ந்து, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை உள்துறை அமைச்சர் அமித்ஷா பார்வையாளர்களுடன் சேர்ந்து ரசித்தார். இப்போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதையடுத்து, அமித்ஷா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “உயர்ந்து பறக்கும் திரங்கா! இந்த அற்புதமான வெற்றிக்காக எங்கள் கிரிக்கெட் அணிக்கு ஒரு பெரிய கரகோஷம். ஒருநாள் உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றிப் பயணத்தை அந்த அணி தொடர்கிறது. பொதுவான இலக்குடன் கூடிய தடையற்ற குழுப்பணி எவ்வளவு பெருமையை அடைய முடியும் என்பதை நீங்கள் அனைவரும் காட்டியுள்ளீர்கள். பாரத தேசம் 2023 உலகக் கோப்பையை வெல்வதை நோக்கி உங்கள் தளராத பயணத்திற்கு எனது வாழ்த்துக்கள்” என்று தெரிவித்திருந்தார்.

Tiranga flying high 🇮🇳

A big round of applause for our cricket team for this stupendous victory. The team continues its winning streak against Pakistan in the ODI World Cup. You all have shown how much pride seamless teamwork with a common goal can achieve for our nation.

My…

— Amit Shah (@AmitShah) October 14, 2023

 

தொடர்ந்து, இன்று அகமதாபாத்தில் தரியாபூர் சட்டமன்றத் தொகுதியின் பா.ஜ.க. எம்.எல்.ஏ. கவுசிக்பாய் ஜெயினின் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார். முன்னதாக, நாரன்புரா சட்டப்பேரவைத் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஜிதேந்திரபாய் படேலின் கட்சி அலுவலகத்தையும் அமித்ஷா திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், முதல்வர் பூபேந்திர படேல், பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags: AmitshaGujratInteractsAnganwadi Children
ShareTweetSendShare
Previous Post

ரசிகர்களுக்கு லோகேஷ் கனகராஜ் வைத்த கோரிக்கை !

Next Post

அப்துல் கலாம் பிறந்தநாள்- குடியரசுத் தலைவர் மரியாதை!

Related News

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!

நார்டன் மோட்டார் சைக்கிளை பார்வையிட்ட இரு நாட்டு பிரதமர்கள்!

ப்ரீ புக்கிங்கில் வசூலை குவிக்கும் கூலி திரைப்படம்!

நீலகிரி : லாரி மோதி கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒருவர் பலி!

தாய்லாந்து – கம்போடியா இடையே ஏற்பட்ட மோதல் -11 பேர் கொல்லப்பட்டனர்!

திருவள்ளூர் : பண மோசடி புகாரளித்த சின்னத்திரை நடிகை – போலீசார் விசாரணை!

குளச்சல் அருகே சிறுவன் மூச்சுத்திணறி உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies