உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இந்தியா பாக்கிஸ்தான் போட்டியை கண்ட நடிகர் சதீஸ் வந்தே மாதரம் பாடலை பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முக்கியப் போட்டியாக பார்க்கப்பட்ட இந்தியா- பாகிஸ்தான் நாடுகளுக்கிடையேயான போட்டி நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தப் போட்டியை காண ஏராளமான அரசியல் தலைவர்களும், நடிகர், நடிகைகளும் குவிந்தார்கள்.
இந்நிலையில் தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகரான சதிஷ் இந்தப் போட்டியை காண நேற்று நரேந்திர மோடி மைதானத்திற்கு சென்றுள்ளார். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாக்கிஸ்தான் அணி 191 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்த ஸ்கோர்ரை இந்தியா எளிதில் கடந்து போட்டியையில் வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் அணியை இந்திய அணி வீழ்த்தியதைக் கொண்டாடும் விதமாக அங்கு கூடியிருந்த லட்சக்கணக்கானோர் வந்தே மாதரம் பாடலை பாடி உள்ளார்கள். அப்போது நடிகர் சதீஷூம் சேர்ந்து அந்த பாடலை பாடியுள்ளார். இது குறித்த வீடியோவை அவர் தனது இணையத்தில் வெளியிட்டுள்ளார்.