ஜெகவீர கட்டபொம்மன் – ஆறுமகத்தம்மாள் தம்பதியருக்கு 1760 -ம் ஜனவரி மாதம் 3 -ம் தேதி, ஆண்டில் பிறந்த ஒரு குழந்தைதான் பின்னால், உலகமே போற்றும் ஒரு மாவீரனாக உருவெடுத்தது.
ஜெகவீர கட்டபொம்மன் பாளையக்காரராக இருந்து வந்ததால், தந்தைக்கு உதவியாக இருந்த கட்டபொம்மன், பிப்ரவரி 1790-ம் ஆண்டு 2 -ம் தேதி 47 -வது பாளையக்காரராக பொறுப்பு ஏற்றார்.
அப்போது, ஆங்கிலேயர்கள் பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பெனியை இந்தியாவில் தொடங்கினர். அக்கம்பெனியின் நேரடி ஆட்சி திருநெல்வேலியிலும் உருவானது.
இதனால், திருநெல்வேலியைச் சுற்றியுள்ள அனைத்து பாளையக்காரர்களிடம் வரி வசூலிக்கப்பட்டது. ஆங்கிலேயர்களுக்குப் பயந்த சிலர், வரி செலுத்தினர். வீரபாண்டிய கட்டபொம்மன் உள்ளிட்ட எதிர்த்தவர்களுக்கு அதிக வரியும், தண்டனையும் வழங்கப்பட்டது. ஆங்கிலேயர்களை துணிச்சலோடு எதிர்த்தார் என்பதால் கட்டபொம்மன் வீரமும், விவேகமும் நாலா திசைகளிலும் வேகமாகப் பரவியது.
1799 -ல் செப்டம்பர் 1 – ம் தேதி ஆங்கிலேயப் படை பாஞ்சாலங்குறிச்சியின் மீது படையெடுத்து, வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையை கைப்பற்றியது. கட்டபொம்மன் புதுக்கோட்டை மன்னனிடம் அடைக்கலம் புகுந்தார். ஆனால், ஆங்கிலேயர்களுக்குப் பயந்து, புதுக்கோட்டை மன்னன் கட்டபொம்மனை காட்டிக் கொடுத்ததால், ஆங்கிலேயர்கள் கைது செய்தனர்.
1799 -ம் ஆண்டு அக்டோபர் 16 -ம் நாள் கயத்தாறு பகுதியில் வெள்ளையர்களால் தூக்கிலிடப்பட்டு, இந்திய விடுதலைப் போருக்கு வித்திட்ட மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன். அவரது 224 -வது ஆண்டு நினைவு நாள் இன்று.
இந்தியச் சுதந்திரப் போராட்டத்திற்கு 6 தசாப்தங்கள் முன்பே, ஆங்கிலேயர்களைத் துணிச்சலாக எதிர்த்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன் வீரத்தையும், தியாகத்தையும் நினைவுகூர்வோம்.