தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடங்கிய நடைபயணத்தில் காவடி ஆட்டம் பொது மக்களை வெகுவாக கவர்ந்தது.
பாரதத்தில் பாஜக 3 -வது முறையாக ஆட்சி அமைக்க வேண்டும் என்றும், பாரதப் பிரதமர் மோடியே மீண்டும் 3-வது முறையாகப் பிரதமர் ஆக வேண்டும் என்றும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, என் மண், என் மக்கள் என்ற தலைப்பில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
கடந்த ஜூலை மாதம் 28-ம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபயணம் கடந்து வந்துள்ளது.
2-ம் கட்ட யாத்திரை நிறைவடைந்ததை அடுத்து, தற்போது, 3-வது கட்ட நடைபயணம் திருப்பூர் மாவட்டம், அவினாசியில் தொடங்கியுள்ளது. இந்த நடைபயணத்தை, மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தொடங்கி வைத்தார்.
முன்னதாக, மத்திய அமைச்சரை வரவேற்கும் வகையில், சாலைகளில் இருபுறமும் செண்டை மேளம் முழங்கப்பட்டது. அதன் முழக்கம் அங்கிருந்தவர்களை ஆட்டம் போட வைத்தது. மேலும், சிலர் தங்கள் தோள் மீது காவடியை வைத்து காவடி ஆட்டம் ஆடினர். அப்போது, காவடியில் இருந்த மலர்கள் அப்படியே சாலைகளில் மழை போல் கொட்டியது. இதனால், சாலையெங்கும் காவி மயமாகக் காட்சி தந்தது.
காவடி ஆடுபவர்களின் நடனம் அங்கிருந்த பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதனைத் தொடர்ந்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் நடைபயணம் தொடங்கியது.