பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர் மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த நாடு முழுவதும் 30 ஆயிரம் மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்க, பாரதப் பிரதமர் மோடியின் பாஜக அரசு அதிரடி முடிவு செய்தது.
அந்த வகையில், தமிழகத்தில் கல்வி பயின்று வரும் 3,093 பேருக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்காக, கடந்த செப்டம்பர் 29-ம் தேதி நடைபெற இருந்த எழுத்துத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தற்போது, இந்த எழுத்துத் தோ்வானது காலம் நேரம் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், 8 மற்றும் 10-ஆம் வகுப்புகளில் 60 சதவீதம், அதற்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்ற அனைத்து மாணவர்களும் தேசிய கல்வி உதவித் தொகை பெற முடியும்.
மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே இந்த ஆண்டுக்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு இந்த கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த திட்டத்தில் ஏராளமான மாணவர்கள் பயன்பெற உள்ளனர்.
பாரதப் பிரதமர் மோடியின் திட்டங்கள் இதுவரை முதியவர்கள், நடுத்தர வர்க்கத்தினர், பெண்கள், இளைஞர்கள் எனப் பல திசைகளிலும் சென்று கொண்டிருந்த நிலையில், தற்போது, மாணவர்களின் எதிர்கால நலன் கருதி அவர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனால், 8-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.