ஒரு நாள் கிரிக்கெட் உலகக்கோப்பையின் 14 வது லீக் சுற்றில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்யை தேர்வு செய்துள்ளது.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் 13 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இன்று 14 வது போட்டி லக்னோவில் உள்ள ஏகானா ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் நடைபெற்றிருக்கிறது.
இந்த போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்யை தேர்வு செய்துள்ளது.
இலங்கை அணியின் வீரர்கள் :
பதும் நிஸ்ஸங்க, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ் (கேப்டன்), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, சாமிக்க கருணாரத்ன, துனித் வெல்லலகே, மஹீஷ் தீக்ஷன, மதீஷ பத்திரன, டில்ஷான் மதுஷங்க.
ஆஸ்திரேலியா அணியின் வீரர்கள் :
டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, கிளென் மேக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ், மார்கஸ் ஸ்டோனிஸ், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.