காஷ்மீர் பள்ளத்தாக்கு மற்றும் லடாக்கின் பகுதிகளில் இன்று பனிப்பொழிவு காணப்பட்டது, அதே நேரத்தில் பிற பகுதியில் கனமழையும் பெய்ந்தது. இதன் காரணமாக பள்ளத்தாக்கு முழுவதும் வெப்பநிலைக் குறைந்தது.
Gurez, Pir ki Gali, Zojila, Drass மற்றும் Machhil போன்ற பகுதிகள் பனிப்பொழிவால், ஸ்ரீநகர், புல்வாமா, ஷோபியான், அனந்த்நாக் மற்றும் பாரமுல்லா போன்ற சமவெளிகளில் மழை பெய்தது. பனிப்பொழிவு காரணமாக, குரேஸ்-பந்திபோரா மற்றும் ஸ்ரீநகர்-கார்கில் சாலைகள் போக்குவரத்துக்கு மூடப்பட்டன.
”ஜம்மு மற்றும் காஷ்மீரின் பல இடங்களில் இடைவிடாத மழை, பனிப்பொழிவு (அதிகமான பகுதிகளில்) மேகமூட்டத்துடன் காணப்படும். ”ஜம்மு மற்றும் காஷ்மீரில் லேசானது முதல் மிதமான மழை, பனி பெய்ய வாய்ப்புகள் உள்ளன. 17ஆம் தேதி ஆங்காங்கே லேசான மழை, பனிப்பொழிவு பெய்ய வாய்ப்பு உள்ளது. அக்டோபர் 18-ம் தேதிக்குப் பிறகு வானிலை மேம்படும்” என்று காஷ்மீர் வானிலை ஆய்வுத் துறை (MeT) தெரிவித்துள்ளது.
”விவசாயிகள் பயிர் அறுவடையை வரும் 17ம் தேதிக்கு ஒத்திவைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மோசமான வானிலை போக்குவரத்தை தற்காலிகமாக பாதிக்கலாம், குறிப்பாக Zojila, முகல் ரோடு, Sinthantop, Sadnatop போன்ற பாதிக்கப்படக்கூடிய இடங்களில் விவசாயிகள் விழிப்புடன் இருக்கவும், அதற்கேற்ப திட்டமிடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், ”என்று வானிலை துறை தெரிவித்துள்ளது.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்த பருவத்தில் ஏற்படும் மூன்றாவது பனிப்பொழிவு இதுவாகும். இந்த ஆண்டு குளிர்காலம் ஆரம்பமான நிலையில், வரும் நாட்களில் வெப்பநிலை மேலும் குறையும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.