திருப்பதியிலிருந்து விழுப்புரம் செல்லும் இரயில் இன்று முதல் வரும் 22 -ம் தேதி வரை காட்பாடி வரை மட்டுமே செல்லும் என தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு இரயில்வே முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், விழுப்புரத்தில் இருந்து காலை 5:35 மணிக்கு புறப்படும் (வண்டி எண் – 16854) திருப்பதி ரயில் இன்று முதல் 22 -ம் தேதி வரை காட்பாடி வரை மட்டுமே செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, திருப்பதியில் இருந்து பகல் 1:40 மணிக்குப் புறப்படும் (வண்டி எண் – 16853) விழுப்புரம் இரயில், இன்று முதல் வரும் 22 -ம் தேதி வரை திருப்பதி – காட்பாடி இடையே ரத்து செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.