ஜம்மு-காஷ்மீரின் ஷெரேபியில் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட 224 மீட்டர் நீள இருவழி வளைவுப் பால கட்டுமானப் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இந்த உள்கட்டமைப்பு வசதி, தேசிய நெடுஞ்சாலை 44-ல் ராம்பன் முதல் பனிஹால் வரையிலான பிரிவில் அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார். இந்த 224 மீட்டர் பாதை பயண தூரத்தைக் குறைப்பது மட்டுமின்றி, செங்குத்தான சாய்வுகளைக் குறைப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், இது ஷெரேபிபி பகுதியின் சாய்வுகள் நிறைந்த சவாலான நிலப்பரப்பைத் தவிர்த்து, வாகனங்களின் சீரான இயக்கத்தை எளிதாக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
📍 In Jammu & Kashmir, we have successfully 𝐜𝐨𝐦𝐩𝐥𝐞𝐭𝐞𝐝 𝐭𝐡𝐞 𝐜𝐨𝐧𝐬𝐭𝐫𝐮𝐜𝐭𝐢𝐨𝐧 𝐨𝐟 𝐚 𝟐𝟐𝟒-𝐦𝐞𝐭𝐞𝐫 𝐯𝐢𝐚𝐝𝐮𝐜𝐭 (𝟐-𝐥𝐚𝐧𝐞) 𝐚𝐭 𝐒𝐡𝐞𝐫𝐞𝐛𝐢𝐛𝐢, 𝐰𝐢𝐭𝐡 𝐚𝐧 𝐞𝐬𝐭𝐢𝐦𝐚𝐭𝐞𝐝 𝐜𝐨𝐬𝐭 𝐨𝐟 𝟏𝟐 𝐂𝐫𝐨𝐫𝐞𝐬. 𝐓𝐡𝐢𝐬 𝐢𝐧𝐟𝐫𝐚𝐬𝐭𝐫𝐮𝐜𝐭𝐮𝐫𝐞… pic.twitter.com/TWhCcbDxMj
— Nitin Gadkari (@nitin_gadkari) October 16, 2023
இந்தத் திட்டம் அந்தப் பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரிதும் பங்களிக்கிறது என்றும் அப்பகுதியின் ஒட்டுமொத்த போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துகிறது என்றும் அமைச்சர் கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமை, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறந்த நெடுஞ்சாலை உள்கட்டமைப்பை வழங்குவதில் உறுதியாக இருப்பதாகவும் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.