திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் சுமார் 3 மணி நேரத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரமோற்சவ விழா கடந்த 15ஆம் தேதி தொடங்கி யது. ஏழுமலையான் பெரிய சேஷ வாகனத்தில் 4 மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். வரும் 23ஆம் தேதி வரை பிரமோற்சவ விழா நடைபெறுகிறது.
பிரமோற்சவ விழாவை முன்னிட்டு விஜபி தரிசனம், மூத்த குடிமக்கள் உள்ளிட்ட சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சுமார் 3 மணிநேரத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
திருமலையில் நேற்று 73,859 பேர் தரிசனம் செய்ததாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதேபோல் 30,634 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியதாகவும், ரூ.3.31 கோடி உண்டியல் காணிக்கை வசூலானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.