தன்பாலின திருமணத்தை அனுமதிக்கலாமா : நீதிமன்ற தீர்ப்பு என்ன ?
Aug 18, 2025, 11:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தன்பாலின திருமணத்தை அனுமதிக்கலாமா : நீதிமன்ற தீர்ப்பு என்ன ?

Web Desk by Web Desk
Oct 17, 2023, 01:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தன் பாலின திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கோரிய வழக்கில், 4 விதமான தீர்ப்புகளை வழங்கிய உச்சநீதிமன்றம், இந்த விவகாரத்தில் பார்லிமென்ட் தான் முடிவு செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளது.

தன் பாலினத்தைச் சேர்ந்த ஜோடிகள், தங்களின் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்க வேண்டும் என, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளன. இது தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. என்றாலும், இது குறித்து ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்க, அரசு தரப்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கோரும் வழக்குகளில், தலைமை நீதிபதி சந்திரசூட், சஞ்சய் கிஷன், ரவிந்திர பட் , ஹமா கோஹ்லி, பிஎஸ் நரசிம்மா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. இந்த அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.

அப்போது தலைமை நீதிபதி சந்திரசூட் கூறுகையில், இந்த வழக்கில் 4 விதமான தீர்ப்புகள் வந்துள்ளன. தன் பாலின விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிடக் கூடாது என மத்திய அரசு தனது நிலைப்பாடாக கூறியது. 200 ஆண்டுகளுக்கு முன் முன்னோர்களால் ஏற்க முடியாத பல விஷயங்கள் இன்று ஏற்கக் கூடியதாக மாறி இருக்கிறது. சதி, குழந்தை திருமணங்கள் போன்ற முன்பு ஏற்கப்பட்ட விஷயங்கள் இன்று மறுக்கப்படுகின்றன.

திருமணம் தொடர்பான விவகாரத்தில் புதிய சட்டத்தை உருவாக்க பார்லிமென்டையோ, சட்டசபையையோ கட்டாயப்படுத்த முடியாது.நீதிமன்றத்தால் ஒரு சட்டத்தை உருவாக்க முடியாது. ஆனால், சட்டத்தின் ஷரத்துகளை கையாள முடியும்.சிறப்பு திருமண சட்டத்தை அரசியல் சாசனத்திற்கு எதிரானதாக கருதிலால் ஒரு முற்போக்கான சட்டத்தை இழக்க நேரிடும்.

சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் தன் பாலின திருமணங்களுக்கான சட்ட உரிமையை நீதிமன்றங்கள் தானாக சேர்க்க முடியாது.சிறப்பு திருமண சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டுமா என்பதை பார்லிமென்ட் தான் முடிவு செய்ய வேண்டும்.

தன்பாலின திருமணம் என்பது முன்னேறிய வகுப்பினர் இடையே மட்டும் காணப்படுவது அல்ல. தன் பாலின உறவு என்பது நகர்ப்புறத்தை சேர்ந்தது என்று கருத்து ஏற்புடையது அல்ல. திருமணம் என்பது நிலையானது, மாறாதது எனக்கூறுவது தவறான விஷயம். சிறப்பு திருமணச் சட்டத்தை ரத்து செய்தால் நாட்டை சுதந்திரத்திற்கு முந்தைய காலத்திற்கு கொண்டு செல்லும்.

வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பது என்பது ஒருவரின் வாழ்க்கை பாதையை தேர்ந்தெடுப்பது போன்றது. தன்பாலின திருமணங்களுக்கு சட்ட உரிமையை நீதிமன்றம் தாமாக முன்வந்து வழங்க முடியாது. தன்பாலின இணையர்களால் குழந்தைகளை சரியான முறையில் வளர்க்க முடியாது என்பதற்கான ஆதாரப்பூர்வ தரவுகள் இல்லை. இவ்வாறு நீதிபதி கூறினார்

Tags: supreme court
ShareTweetSendShare
Previous Post

ஒலிம்பிக்கில் கிரிக்கெட்: பிரதமர் மோடி வரவேற்பு !

Next Post

ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டது இவருக்காக தானா !

Related News

டிரம்பின் வரிகள் அமெரிக்காவை தனிமைப்படுத்தும் : பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் கடும் எச்சரிக்கை!

பொருளாதார நெருக்கடியில் சீனா : அமெரிக்காவுக்கு தாவும் முதலீட்டாளர்களால் அதிர்ச்சி!

பாகிஸ்தானை புரட்டிப்போட்ட பெருவெள்ளம் : 48 மணி நேரத்தில் 300 பேருக்கு மேல் பலி..!

ஆயுத கொள்முதலை தொடரும் பாகிஸ்தான் : 3-வது ஹேங்கர் ரக நீர்மூழ்கி கப்பலை வழங்கிய சீனா!

பூமியை அதி வேகமாக நெருங்கும் ‘சிறுகோள்’ : ஆபத்தில்லை என உறுதிப்படுத்திய நாசா!

FORBES-ன் அமெரிக்க வாழ் இந்திய பில்லியனர்ஸ் பட்டியல் : 12 பில்லியனர்களுடன் இந்தியா முதலிடம்…!

Load More

அண்மைச் செய்திகள்

புதினின் “மலக் கழிவுகள்” சேகரிக்க பிரத்தியேக சூட்கேஸ் : காரணம் என்ன தெரியுமா?

ஓங்கும் புதின் கை : கேள்விக்குறியாகும் உக்ரைன் எதிர்காலம்!

ஜாக்பாட் அடித்த ஒடிசா : 3 மாவட்டங்களில் 9 தங்க சுரங்கங்கள் கண்டுபிடிப்பு!

E-OFFICE – முந்தும் திரிபுரா!

அரசுப் பள்ளி TO இந்தியாவின் VP : தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் சி.பி. ராதாகிருஷ்ணன்!

பிரதமர் மோடி – ரஷ்ய அதிபர் புதின் தொலைபேசியில் பேச்சு!

மதுரை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

கிட்னி திருட்டு சம்பவம் – அவசர வழக்காக விசாரிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் முறையீடு!

அமைச்சர் மனோதங்கராஜ் உட்பட 11 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்!

மகாராஷ்டிரா : மும்பை புறநகரில் கொட்டித் தீர்க்கும் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies