உலககோப்பை கிரிக்கெட் புள்ளி பட்டியலில் தற்போது அதிரடி மாற்றங்கள் நடந்துள்ளது.
2023 ஆம் ஆண்டு ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது. அதே சமயம் இலங்கை அணி விளையாடிய மூன்றுப் போட்டிகளிலும் தோல்வியை தழுவி இருக்கிறது.
இதனால் உலககோப்பை புள்ளி பட்டியலில் தற்போது அதிரடி மாற்றங்கள் நடந்திருக்கிறது. அது என்னவென்று தற்போது பார்க்கலாம்.
ஆஸ்திரேலிய அணி கடைசி இடத்தில் இருந்த நிலையில் தற்போது முதல் வெற்றியை பெற்றுள்ளதால் அவர்கள் 8வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார்கள்.
விளையாடிய மூன்று போட்டியில் ஒரு வெற்றி இரண்டு தோல்வி ,2 புள்ளிகள் என மைனஸ் 0.73 ரன் ரேட்டில் இருக்கிறார்கள் . விளையாடிய மூன்று போட்டிகளிலுமே தோல்வியை தழுவியுள்ள இலங்கை அணி தற்போது எந்த புள்ளிகளும் இல்லாமல் மைனஸ் 1.53 என்ற அளவில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறார்கள். இந்திய அணி தொடர்ந்து முதலிடத்திலும் நியூசிலாந்து அணி இரண்டாவது இடத்திலும் தென்னாப்பிரிக்கா அணி மூன்றாம் இடத்திலும் பாகிஸ்தான் அணி நான்காவது இடத்திலும் இருக்கிறது.
இங்கிலாந்து ஐந்தாவது இடத்திலும் ஆப்கானிஸ்தான் ஆறாவது இடத்திலும் வங்கதேச அணி ஏழாவது இடத்திலும் இருக்கிறார்கள். இந்த நிலையில் இலங்கை அணிக்கு இன்னும் 6 போட்டிகள் எஞ்சி இருக்கிறது. இந்த ஆறு போட்டிகளில் வெற்றி பெற்றால் தான் அரை இறுதி வாய்ப்பு பற்றி யோசிக்க முடியும். இன்னும் சொல்லப்போனால் அப்படி 12 புள்ளிகளை பெற்றால் கூட இலங்கை அணி மற்ற அணிகளை நம்பி தான் இருக்க முடியும்.இதனால் இன்னும் ஒரு போட்டியில் இலங்கை தோற்றால் கூட அவர்களுடைய உலகக்கோப்பை வாய்ப்பு முடிந்துவிடும்.
இலங்கை அணி இன்னும் நெதர்லாந்து, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், இந்தியா, வங்கதேசம்,நியூசிலாந்து ஆகிய அணிகளை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நெதர்லாந்து, ஆகிய அணிகளை இலங்கை வீழ்த்தும் பட்சத்தில் இந்தியா நியூசிலாந்து இங்கிலாந்து ஆகிய அணிகளில் ஏதேனும் இரண்டு போட்டிகள் ஆவது இலங்கை வெற்றி பெற வேண்டும். ஆனால் இலங்கை தற்போது உள்ள நிலைமையில் நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான் ,வங்கதேசத்தை அவர்கள் வெல்லுவது கடினமாகும்.