பத்மஶ்ரீ விருது பெற்ற மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த 108 வயது பாப்பம்மாள் பாட்டியிடம் ஆசிர்வாதம் வாங்கிய பாஜக தலைவர்கள்.
இன்றைய #EnMannEnMakkal பயணத்தில், மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு @PiyushGoyal அவர்கள், மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் அண்ணன் திரு @Murugan_MoS அவர்கள், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அக்கா @VanathiBJP மற்றும் @BJP4TamilNadu மாநில பொதுச் செயலாளர் @apmbjp ஆகியோருடன், பத்மஶ்ரீ… pic.twitter.com/UaheiyHdyV
— K.Annamalai (@annamalai_k) October 16, 2023
என் மண் என் மக்கள் பயணத்தில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மத்திய இணையமைச்சர் எல் முருகன், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மாநில பொதுச் செயலாளர் ஆகியோருடன், பத்மஶ்ரீ விருது பெற்ற மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த 108 வயது பாப்பம்மாள் பாட்டி அவர்களைச் சந்திக்கும் இனிய வாய்ப்பு கிடைத்தது. பாப்பம்மாள் பாட்டி அவர்களின் அன்பையும் ஆசிகளையும் பெற்றதை, பெரும் பாக்கியமாகக் கருதுகிறோம் என அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.