சபரிமலை ஐயப்பன் கோவில்: புதிய மேல்சாந்தி தேர்வு!
Mar 15, 2026, 12:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சபரிமலை ஐயப்பன் கோவில்: புதிய மேல்சாந்தி தேர்வு!

Murugesan M by Murugesan M
Oct 18, 2023, 02:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சபரிமலை ஐயப்பன் கோவில் புதிய மேல்சாந்தியாக பிரம்மஸ்ரீ மகேஷ் மற்றும் மாளிகைப்புறம் மேல் சாந்தியாக பிரம்மஸ்ரீ முரளி நம்பூதிரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்ப சுவாமி கோவிலில், ஐப்பசி மாத பூஜைகளுக்காக, நேற்று மாலை நடை திறக்கப்பட்டது. மேல் சாந்தி நடை திறந்து தீபம் ஏற்றினார். இரவு 10.00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இன்று அதிகாலை 5.00 மணிக்கு நடை திறந்ததும் நிர்மால்ய தரிசனம், அபிஷேகத்துக்குப் பின்னர் நெய்யபிஷேகத்தை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு தொடங்கி வைத்தார். தொடர்ந்து கணபதி ஹோமம், புஷ்பாபிஷேகம், நெய் அபிஷேகம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடைபெற்றது.

இதனிடையே, ஆண்டுக்கு ஒரு முறை சபரிமலை ஐயப்பன் கோவிலிலும், மாளிகைபுறத்து அம்மன் கோவிலுக்கும் மேல்சாந்தி தேர்வு செய்யப்படுவது வழக்கம். அதன்படி, காலை 7.30 மணிக்கு உஷ பூஜை நிறைவு பெற்றதும், கார்த்திகை மாதம் 1-ஆம் தேதி முதலான ஒரு ஆண்டு காலத்துக்கான புதிய மேல் சாந்தி தேர்வு நடைபெற்றது. இதில், சபரிமலை புதிய மேல்சாந்தியாக பிரம்மஸ்ரீ மகேஷ் தேர்வு செய்யப்பட்டார். மாளிகைப்புறம் மேல் சாந்தியாக பிரம்மஸ்ரீ முரளி நம்பூதிரியும் தேர்வு செய்யப்பட்டனர்.

வரும் 22-ஆம் தேதி வரை ஐப்பசி மாத பூஜைகள் நடைபெறும். எல்லா நாட்களிலும் வழக்கமான உஷ பூஜை, உச்ச பூஜை, களபாபிஷேகம், தீபாராதனை, அத்தாழ பூஜை இவற்றுடன் தினமும் இரவு 7.00 மணிக்கு படி பூஜை நடைபெறும். எல்லா நாட்களிலும் உதயாஸ்தமன பூஜை உண்டு. 22-ஆம் தேதி இரவு 10.00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

Tags: Sabarimalai
ShareTweetSendShare
Previous Post

மகாகாலேஷ்வர் கோவிலுக்கு சென்ற தமிழக ஆளுநர் !

Next Post

1023 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள்!

Related News

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies